\
கீர்த்தி சுரேஷ் நடித்த 'நடிகையர் திலகம்' மே 9-ல் ரிலீஸ்

கீர்த்தி சுரேஷ் நடித்த 'நடிகையர் திலகம்' மே 9-ல் ரிலீஸ்

கீர்த்தி சுரேஷ் நடித்த 'நடிகையர் திலகம்' மே 9-ல் ரிலீஸ்
Published on

கீர்த்தி சுரேஷ் மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்துக்கு "நடிகையர் திலகம்" என
பெயரிடப்பட்டுள்ளது. இந்தப்படத்தை நாக் அஸ்வின் இயக்கி வருகிறார்.

இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் எடுக்கப்பட்டுள்ளது. தமிழில் இதற்கு நடிகையர் திலகம் என்றும் தெலுங்கில் மகாநதி என்றும்
தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அப்படத்தின் சகல வேலைகளும் முடிவடைந்துவிட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் கீர்த்தி சுரேஷ் கடந்த
சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். இந்தப் படத்தில் மறைந்த நடிகர் ஜெமினி கணேசன் கதாப்பாத்திரத்தில் மலையாள நடிகர்
துல்கர் சல்மான் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகையர் திலகம் படத்தின் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் "மே 9 முதல் திரையில் தோன்ற ஒப்பனை
அறையில்..." என கீர்த்தி சுரேஷ் மேக் அப் செய்யும் போஸ்டர் வெளியடப்பட்டுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com