‘யாவரும் நலம்’ இயக்குநரின் அடுத்தப்படம்: அப்டேட் கொடுத்த நடிகர்!

‘யாவரும் நலம்’ இயக்குநரின் அடுத்தப்படம்: அப்டேட் கொடுத்த நடிகர்!

‘யாவரும் நலம்’ இயக்குநரின் அடுத்தப்படம்: அப்டேட் கொடுத்த நடிகர்!
Published on

மாதவன் நடித்த ’யாவரும் நலம்’ சூர்யாவின் ‘24’ படங்களை இயக்கிய விக்ரம் கே.குமாரின் அடுத்தப்பட அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

தமிழில் சிம்பு நடித்த அலை, மாதவன் நடித்த யாவரும் நலம், சூர்யா நடித்த ’24’ ஆகிய  படங்களை இயக்கி தன் படங்களுக்கென தனித்துவமான ரசனை கொண்ட ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர் இயக்குநர் விக்ரம் கே.குமார். தமிழில் படங்கள் இயக்க நீண்ட வருடங்கள் எடுத்துக்கொண்டாலும் இவரது படங்கள் என்றாலே நம்பிச் செல்பவர்கள் உண்டு. இவர் தெலுங்கில் முன்னணி இயக்குநராக உள்ளார்.

 ஆங்கில மொழியில் இயக்கிய இவரது முதல் படமான ’சைலண்ட் ஸ்ட்ரீம்’ தேசிய விருதை வென்ற படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, தெலுங்கில் வெளியான மனம் படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான விருதையும் வென்றுள்ளார். 

விக்ரம் கே.குமார் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ‘யாவரும் நலம்’ மெகா ஹிட் அடித்தது. அதேபோல, சூர்யா, சமந்தா நடிப்பில் இயக்கிய டைம் ட்ராவல் கதையான ‘24’ படமும் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது. இந்நிலையில், தனது அடுத்தப் படத்தை அறிவித்துள்ளார். தமிழில் மூன்று படங்களும் தெலுங்கில் 5 படங்களும் இயக்கியவர் இம்முறையும் தெலுங்கு படத்தைதான் இயக்கவுள்ளார்.

இப்படத்தில், ஹீரோவாக நடிக்கவிருப்பவர் நடிகை சமந்தாவின் கணவர் நாக சைதன்யா என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, இந்தக்கூட்டணி கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ‘மனம்’ படத்தில் இணைந்து வெற்றிக் கூட்டணியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தனது ட்விட்டரில் நெகிழ்ச்சியான பதிவிட்டுள்ளார் நடிகர் நாகசைதன்யா. இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்வது நம்மூர் பி.சி ஸ்ரீராம்தான். அவரும் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com