\
’காலா’ ரிலீஸ் தகவல்: வுண்டர்பார் புது தகவல்!

’காலா’ ரிலீஸ் தகவல்: வுண்டர்பார் புது தகவல்!

’காலா’ ரிலீஸ் தகவல்: வுண்டர்பார் புது தகவல்!
Published on

ரஜினிகாந்த், ஹூமா குரேஸி, நானா படேகர், ஈஸ்வரி ராவ், சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்துள்ள படம், ’காலா’. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். முரளி ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இதன் பாடல்கள் வெளியிடப்பட்டன. 

இந்தப் படம் ஜூன் 7-ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று படத்தைத் தயாரித்துள்ள தனுஷ் கூறியிருந்தார். இதற்கிடையே காலா ரிலீஸ் தள்ளிப்போக இருப்பதாக சில மீடியாவில் செய்தி வெளியானது. இதை வுண்டர்பார் பிலிம்ஸ் மறுத்துள்ளது. ’திட்டமிட்டபடி, ஜூன் 7-ம் தேதி படம் ரிலீஸ் ஆகும். விரைவில் படம் பற்றி, விரைவில் உற்சாகமான செய்திகள் வெளியாக இருக்கின்றன’ என்று வுண்டர்பார் பிலிம்ஸ் தெரிவித்துள்ளது.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ஒரே நாளில் வெளியாகிறது. 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com