“இவர்கள் திருந்தவே மாட்டார்களா?” - ‘திமிரு புடிச்சவன்’ மீது ராஜேஷ்குமார் கதை திருட்டு புகார்

“இவர்கள் திருந்தவே மாட்டார்களா?” - ‘திமிரு புடிச்சவன்’ மீது ராஜேஷ்குமார் கதை திருட்டு புகார்

“இவர்கள் திருந்தவே மாட்டார்களா?” - ‘திமிரு புடிச்சவன்’ மீது ராஜேஷ்குமார் கதை திருட்டு புகார்
Published on

பிரபல கிரைம் கதை எழுத்தாளர் ராஜேஷ்குமார், திமிரு புடிச்சவன் படம் மீது கதை திருட்டு புகார் கூறியுள்ளார். 

தமிழ் சினிமா உலகில் கதை திருட்டு சர்ச்சை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இருப்பினும், சமீபத்தில் சர்கார் மற்றும் சர்கார் படத்திற்கு அடுத்தடுத்து கதை திருட்டு சர்ச்சை வெடித்தது. சர்கார் படத்தில் நீதிமன்றம் வரை சென்று பின்னர் சமாதானம் மூலம் பிரச்னை தீர்த்து வைக்கப்பட்டது. 96 படத்தில் கதை திருட்டு தொடர்பாக இரண்டு தரப்பினும் தங்களது விளக்கத்தை தெரிவித்துள்ளனர். இருப்பினும், அந்த பிரச்னைக்கு ஒரு முற்றுப்புள்ளி இன்னும் வைக்கப்படவில்லை. 

96 பட சர்ச்சை முடிவடைவதற்குள் நேற்று வெளியான திமிரு புடிச்சவன் படம் தொடர்பாக கதை திருட்டு சர்ச்சை கிளம்பியுள்ளது. பிரபல கிரைம் கதை எழுத்துள்ளார் இந்த புகாரை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது முகநூல் பக்கத்தில், “சென்ற வருடம் நான் oneindia வில் எழுதிய ஆன் லைன் தொடர் ஒன்+ஒன் =ஜீரோ தொடர்கதையின் அடிப்படை கருவான 18 வயதுக்கு குறைவான சிறுவர்களை Brian wash செய்து தமக்கு வேண்டாதவர்களை கொலை செய்து சட்டத்தின் பிடியில் இருந்து சமூக விரோதிகள் எப்படி தப்பித்துக் கொள்கிறார்கள் என்பது பற்றி எழுதியிருந்தேன். அந்தக் கருவை அப்படியே காப்பி அடித்து 'திமிரு பிடித்தவன்' திரைப்படத்தை எடுத்துள்ளார்கள்” என்று ராஜேஷ்குமார் குறிப்பிட்டுள்ளார். மேலும், “இவர்கள் திருந்தவே மாட்டார்களா?” என காட்டமாக அவர் கேட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com