\
’மாஸ்டர்’ தயாரிப்பாளருடன் இணையும் ‘ரைட்டர்’ இயக்குநர் ஃப்ராங்க்ளின் ஜேக்கப்

’மாஸ்டர்’ தயாரிப்பாளருடன் இணையும் ‘ரைட்டர்’ இயக்குநர் ஃப்ராங்க்ளின் ஜேக்கப்

’மாஸ்டர்’ தயாரிப்பாளருடன் இணையும் ‘ரைட்டர்’ இயக்குநர் ஃப்ராங்க்ளின் ஜேக்கப்
Published on

‘ரைட்டர்’ படத்தின் இயக்குநர் ஃப்ராங்க்ளின் ஜேக்கப்பின் அடுத்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஃப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் ‘ரைட்டர்’ கடந்த 24-ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகி பாராட்டுகளைக் குவித்து வருகிறது. காவல்துறையில் நிலவும் சாதி அடக்குமுறைகளையும் காவலர்களின் ’ரைட்ஸ்’களையும் தொய்வில்லாத திரைக்கதையால் அழுத்தமாகப் பேசி முதல் படத்திலேயே கவனம் ஈர்த்துள்ளார் ஃப்ராங்க்ளின் ஜேக்கப். இந்த நிலையில், அவரது இரண்டாவது படத்தின் அறிவிப்பு தற்போது அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.

இப்படத்தை, விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தின் இணைத் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரிக்கிறார்.  இயக்குநர் பா.ரஞ்சித், லலித்குமார், ஃப்ராங்க்ளின் ஜேக்கப் உள்ளிட்டோர் இருக்கும் புகைப்படப்படத்தை லலித்குமாரும் இயக்குநர் பா.ரஞ்சித்தும் அதிகாரபூர்வமாக வெளியிட்டிருக்கிறார்கள். லலித்குமார் தயாரிப்பில் விக்ரமின் ‘மகான்’, ‘கோப்ரா’ உள்ளிட்டப் படங்கள் விரைவில் வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com