உலக சாதனை படைத்த அமீர்கானின் ‘தங்கல்’

உலக சாதனை படைத்த அமீர்கானின் ‘தங்கல்’

உலக சாதனை படைத்த அமீர்கானின் ‘தங்கல்’

அமீர்கான் நடிப்பில் உருவான ‘தங்கல்’ திரைப்படம் ஹாங்காங்கில் வெளியாகி வசூல் சாதனை படைத்துள்ளது.

விளையாட்டை மையமாகக் கொண்டு வெளியான தங்கல் திரைப்படம் பல்வேறு நாடுகளில் சாதனைகளை படைத்து வருகிறது. இந்நிலையில் ஹாங்காங்கில் கடந்த 24 ஆம் தேதி வெளியான இந்தப்படம் அங்கு பாக்ஸ் ஆபீஸில் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த நான்கு நாட்களில் அங்கு 4.48 கோடி ரூபாய் வசூல் செய்து, அதிக வசூல் செய்த முதல் இந்தியத் திரைப்படம் என்கிற சாதனையை படைத்துள்ளது.

நித்தேஷ் திவாரி இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் வெளியான படம் ‘தங்கல்’. 2016 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கணக்கில் கொண்டு வெளியான இப்படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அமெரிக்கா, கனடா உள்ளிட்ட உலக நாடுகளிலும் இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. வசூலில் பல்வேறு சாதனைகளை படைத்து வந்தது.

மே மாதம் 5 ஆம் தேதி ‘தங்கல்’ சீனாவில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. வெளியான நாள் முதல் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வந்தது. சீனாவில் மட்டும் சுமார் 1000 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது. ‘தங்கல்’ திரைப்படம் உலகளாவிய வசூலில் சுமார் 2000 கோடியை கடந்துள்ளது. இச்சாதனையை எட்டிய முதல் இந்திய திரைப்படம் என்ற இமாலய சாதனையையும் படைத்தது. இந்நிலையில் ஹாங்காங்கிலும் இப்படம் வசூலில் சாதனை படைத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com