\
நடிகைக்கு பாலியல் தொல்லை: இயக்குனர் மீது வழக்குப் பதிவு!

நடிகைக்கு பாலியல் தொல்லை: இயக்குனர் மீது வழக்குப் பதிவு!

நடிகைக்கு பாலியல் தொல்லை: இயக்குனர் மீது வழக்குப் பதிவு!
Published on

நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்து டார்ச்சர் செய்ததாக வெளியான புகாரை அடுத்து, சீரியல் இயக்குனர் மீது மகளிர் ஆணையம் வழக்குப் பதிவு செய்துள்ளது.

மலையாள டிவி சீரியல்களில் நடித்து வருபவர் நிஷா சாரங். இவர், போத்தன் வாவா, மைபாஸ் உட்பட சில படங்களில் நடித்துள்ளார், இவர் இப்போது நடித்து வரும் தொடர், ’உப்பும் மிளகாயும்’ . இதில் நீலிமா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் நிஷா. இந்த தொடரை இயக்கும் உண்ணிகிருஷ்ணன் மீது இவர், பரபரப்பு புகாரைக் கூறினார். 

’இயக்குனர் உண்ணிகிருஷ்ணன் ஷூட்டிங் ஸ்பாட்டில் அடிக்கடி பாலியல் தொல்லை தந்து வந்தார். பலமுறை படுக்கைக்கு அழைத்தார். அதற் கு கடும் எதிர்ப்பு தெரிவித்தேன். இருப்பினும் படப்பிடிப்பின்போது சில்மிஷங்களில் ஈடுபட்டு வந்தார். இதைக் கண்டித்ததால் பலமுறை மரியா தை குறைவாக நடத்தினார். இதுகுறித்து அந்த டிவி சேனல் தலைமை நிர்வாகியிடம் புகார் செய்தேன்.

அவர்கள் நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால் அந்த தொடரில் இருந்து விலகிவிட்டேன். அந்த இயக்குனரை நீக்காவிட்டால் தொடரில் மீண்டும் நடிக்கப் போவதில்லை என்று சேனல் நிர்வாகத்திடம் தெரிவித்துவிட்டேன். அவரை நீக்குவதாக சேனல் நிர்வாகம் கூறியுள்ளது’ என்று நிஷா கூறியிருந் தார். இது மலையாள சின்னத்திரை மற்றும் திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நடிகை நிஷாவுக்கு மலையாள பெண்கள் திரைக்கலைஞர்கள் கூட்டமைப்பு உட்பட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித் தன. ’ஆசைக்கு இணங்க மறுக்கும் நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை’ என்று நடிகை பார்வதி சமீபத்தில் கூறியிருந்தார். இதையடுத்து இந்த சம்பவம் அங்கு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கேரள மாநில மகளிர் ஆணையம் தானாக முன் வந்து, நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக டிவி சீரியல் இயக்குனர் உண்ணிகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com