’அம்மா’வில் மீண்டும் திலீப்: நடிகைகள் எதிர்ப்பு
மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’வில் நடிகர் திலீப் மீண்டும் சேர்க்கப்பட்டதற்கு நடிகைகள் பலர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
மலையாள நடிகர் சங்கம் ‘அம்மா’ (Association of Malayalam Movie Artists) . இதன் தலைவராக கடந்த 18 வருடமாக நடிகர் இன்னசென்ட் இருந்து வந்தார். உடல்நலக்குறைவு காரணமாக, நடிகர் சங்க தலைவர் பதவியில் இருந்து அவர் விலகியதை அடுத்து, புதிய தலைவர் மற்றும் நிர்வாகிக ளை தேர்ந்தெடுக்க, நடிகர் சங்கப் பொதுக்குழுக் கூட்டம் கொச்சியில் நடந்தது. இதில், புதிய தலைவராக மோகன்லால் தேர்தெடுக் கப்பட்டார். துணைத்தலைவராக நடிகர் முகேஷ் எம்.எல்.ஏ., பொதுச் செயலாளராக பாபு, பொருளாளராக ஜெகதீஷ் உள்பட சில புதிய நிர்வாகிகள் தேர்தெ டுக்கப்பட்டனர்.
நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான வழக்கில் நடிகர் திலீப் சிக்கியதால், அவர் ’அம்மா’வில் இருந்து நீக்கப்பட்டி ருந்தார். இந்நிலையில் அவர் இப்போது மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். பொதுக்குழுவில் பெரும்பாலான நடிகர், நடிகைகள் திலீப்பை சேர்க்க ஆதரவு தெரிவித்ததால் அவர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு சில நடிகைகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ரேவதி, ரீமா கல்லிங்கல் உட்பட பல நடிகைகளை உள்ளடக்கிய திரையுலகப் பெண்கள் கூட்டமைப்பும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திலீப்பை சங்கத்தில் மீண்டும் சேர்த்தது ஒட்டுமொத்த பெண்கள் சமூகத்தையும் இழிவுபடுத்துவதாக உள்ளது. இந்த முடிவை நடிகர் சங்கம் திரும்ப பெற வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.