சினிமா
நானாவதி மருத்துவமனைக்கு விளம்பரம் செய்கிறீர்களா?: பெண்ணின் குற்றச்சாட்டு.. அமிதாப் பதில்
நானாவதி மருத்துவமனைக்கு விளம்பரம் செய்கிறீர்களா?: பெண்ணின் குற்றச்சாட்டு.. அமிதாப் பதில்
தன்னுடைய தந்தைக்கு கொரோனோ பாசிட்டிவ் என்று நானாவதி மருத்துவமனை தவறாக பரிசோதனை முடிவுகளை தெரிவித்தது என்றும், அமிதாப் பச்சன் நானாவதி மருத்துவமனைக்கு விளம்பரம் செய்கிறார் என்றும் ஜான்வி மகிஜா என்ற பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
நானாவதி மருத்துவமனை பணத்தில்தான் குறியாக உள்ளது. இதனால் எனக்கு அமிதாப் பச்சன் மீதிருந்த மரியாதையே போய்விட்டது என்று தெரிவித்தார் ஜானவி.
இக்குற்றச்சட்டுக்கு பதிலளித்த அமிதாப் பச்சன் “ உங்கள் தந்தையின் நிலைக்காக வருந்துகிறேன். ஆனால் நானாவதி மருத்துவமனையில் என்னை நன்றாக கவனித்துக்கொண்டனர். நான் அந்த மருத்துவமனைக்கு விளம்பரம் செய்யவில்லை. நான் எப்போதும் மருத்துவ துறையின் மருத்துவர்கள் மீதுள்ள மரியாதையை இழக்கவில்லை. எனது மரியாதை உங்கள் பார்வையில் இல்லை” என்று தெரிவித்தார்.