சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் வேளையில் பெண்கள் பாதுகாப்பு என்பது வெற்றுப் பேச்சாகவே இருப்பதாக பாலிவுட் நடிகை கிரித்தி சனான் வீடியோ மூலம் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக கிரித்தி சனான் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ஆண்டுதோறும் மகளிர் தினத்தன்று பெண்கள் பாதுகாப்பு, பெண்கள் உரிமை உள்ளிட்ட பல்வேறு வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால், நமது தெருக்கள் பாதுகாப்பானவையாக இன்னும் மாறவில்லை. நாம் (பெண்கள்) என்ன ஆடை உடுத்த வேண்டும் என்பதை மற்றவர்களே தீர்மானிக்கிறார்கள். பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிக்கொண்டு மட்டும்தான் இருக்கிறோம். அதனால்தான் நான் இதுபோன்ற விஷயங்கள் குறித்து பேசுவதையே நிறுத்தி விட்டேன் என்று கூறியுள்ளார்.