சீரியல் நடிகர்
சீரியல் நடிகர்web

ஃபோட்டோ எடுக்க மறுத்த சீரியல் நடிகர்.. செய்வினை வைக்க வீட்டிற்கே சென்ற பெண்! என்ன நடந்தது?

ஃபோட்டோ எடுக்க மறுப்பு தெரிவித்த சீரியல் நடிகர் சதீஷ்குமார் வீட்டுக்கு செய்வினை செய்ய எலுமிச்சை பழத்துடன் சென்றுள்ளார் ஒரு பெண். அப்பெண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அந்த நடிகர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
Published on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சதீஷ்குமார் (45). இவர் பெசன்ட் நகர் கலாஷேத்ரா காலனியில் வசித்து வருகிறார்.

இவர் கடந்த ஆண்டு பெசன்ட் நகரில் உள்ள முருகன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றபோது அங்கு சென்ற 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் இவருடன் புகைப்படம் எடுக்க முற்பட்டுள்ளார். அதற்கு சதீஷ்குமார், “சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வந்த பிறகு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்” என கூறியுள்ளார்.

சீரியல் நடிகர்
WhatsApp-ன் அசத்தல் அப்டேட் | ‘அந்த STATUS அனுப்பு’ என இனி கேட்கவேணாம்... நீங்களே ரீஷேர் செய்யலாம்😍

என்ன நடந்தது?

இதனையடுத்து சுமார் 40 வயது மதிக்கத்தக்க அந்த பெண் சீரியல் நடிகரின் மொபைல் எண்ணை கண்டறிந்து தொடர்ச்சியாக தொந்தரவு செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் அந்தப் பெண்ணின் மொபைல் எண்ணை நடிகர் சதீஷ்குமார் பிளாக் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண் நடிகரின் வீட்டுக்கிற்கே நேராக சென்று குங்குமம் தடவிய எலுமிச்சம் பழத்தை நடிகரின் வீட்டு வாசலில் வைத்து விட்டு நடிகரை கூப்பிட்டு, “உனக்கு செய்வினை செய்துவிடுவேன்” என எச்சரித்து சென்றுள்ளார்.

சீரியல் நடிகர்
சீரியல் நடிகர்

இதனால் அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சீரியல் நடிகர் சதீஷ்குமார் திருவான்மியூர் காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் திருவான்மியூர் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

சீரியல் நடிகர்
“திடீரென நான் மோசமாக கூட விளையாடலாம்” - சச்சின் சாதனையை உடைப்பீர்களா என்ற கேள்விக்கு ஜோ ரூட் பதில்!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com