சட்டவிரோதமாக ’தமிழ் ராக்கர்ஸி’ல் வெளியானது ’சாஹோ’

சட்டவிரோதமாக ’தமிழ் ராக்கர்ஸி’ல் வெளியானது ’சாஹோ’
சட்டவிரோதமாக ’தமிழ் ராக்கர்ஸி’ல் வெளியானது ’சாஹோ’

பிரபாஸின் ’சாஹோ’ படம் சட்டவிரோதமாக தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் அதற்குள் ரிலீஸ் ஆகி பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள பிரமாண்டமான ஆக்‌ஷன் படம், ’சாஹோ’. அவர் ஜோடியாக ஸ்ரத்தா கபூர் நடித்துள்ளார். அருண் விஜய், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி, ஜாக்கி ஷெராப், ஜாக்குலின் பெர்ணான்டஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். மதி ஒளிப்பதிவு செய்துள்ளார். சுஜித் இயக்கும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளில் உருவாகியுள்ளது.


இந்தப் படத்துக்காக, ரூ.70 கோடி செலவில் பிரமாண்ட ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. அபுதாபியில் சுமார் 60 நாட்கள் நடந்த இந்தச் சண்டைக் காட்சியை, ’டை ஹார்ட்’, ’டிரான்ஸ் பார்மர்ஸ்’ உட்பட பல ஹாலிவுட் படங்களில் பணியாற்றியள சண்டை இயக்குனர் கென்னி பேட்ஸ் அமைத்துள்ளார். 

இந்தப் படம் உலகம் முழுவதும் இன்று ரிலீஸ் ஆனது. ரிலீஸ் ஆன சில மணி நேரங்களிலேயே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் படம் லீக் ஆகியுள்ளது. அரசு, இந்த இணையதளத்துக்கு தடை விதித்திருந்தும் தொடர்ந்து படங்களை ஆன்லைனில் வெளியிட்டு வருகிறது இந்த இணையதளம். இது தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com