\
துல்கரின் கனவை நிறைவேற்றிய படம்!

துல்கரின் கனவை நிறைவேற்றிய படம்!

துல்கரின் கனவை நிறைவேற்றிய படம்!
Published on

முன்னாள் ஹீரோயின் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு ’மகாநடி’ என்ற பெயரில் சினிமாவாக உருவாகி வருகிறது. தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்துக்கு தமிழில் ’நடிகையர் திலகம்’ என்று பெயர் வைத்துள்ளனர். இந்தப் படத்தில் சமந்தா, கீர்த்தி சுரேஷ், ஷாலினி பாண்டே உட்பட பலர் நடிக்கின்றனர். துல்கர் சல்மான், ஜெமினி கணேசனாக நடிக்கிறார். 

நாக் அஸ்வின் இயக்கும் இந்தப் படத்தில் நடிப்பது பற்றி துல்கர் சல்மான் கூறும்போது, ‘வரலாற்று படத்தில் நடிக்க வேண்டும் என்பது என் கனவு, ஆசை. மலையாள படங்களில் அதற்கான பட்ஜெட் இல்லை. அதனால் எனது அந்த ஆசை, இந்தப் படம் மூலம் நிறைவேறி இருக்கிறது. இதில் நடித்தது என் அதிர்ஷ்டம்தான். இந்த படக்குழு என்னை விட இளமையான டீம். அவர்களுடன் பணியாற்றுவது வித்தியாசமாக இருக்கிறது. பொதுவாக இரு மொழி படங்களை எதிர்ப்பவன் நான். ஆனால், இந்தப் படம் இரண்டு மொழிகளில் வித்தியாசமாக உருவாக்கப்படுகிறது. ஜெமினி கணேசனாக நான் நடிக்கிறேன் என்று எல்லோரும் சொன்னாலும் அவர் போல எதையும் படத்தில் பார்க்க முடியாது. செயற்கையாக அவர் மாதிரி என்னால் நடிக்க முடியாது. 1950-களில் ஒரு சினிமா நட்சத்திரம் எப்படி இருப்பாரோ, அப்படி நடித்திருக்கிறேன்’ என்றார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com