\
"காதலாட" விவேகம் படத்தின் 3வது சிங்கிள் ட்ராக்

"காதலாட" விவேகம் படத்தின் 3வது சிங்கிள் ட்ராக்

"காதலாட" விவேகம் படத்தின் 3வது சிங்கிள் ட்ராக்
Published on: 

அனிருத் இசையமைத்துள்ள விவேகம் படத்தின் 3 வது சிங்கிள் ட்ராக் பாடல் வரும் 20ம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை அப்படத்தின் இயக்குநர் சிவா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

"காதலாட" என்று தொடங்கும் அந்தப் பாடல் அஜித்துக்கு கபிலன் எழுதிய முதல் பாடல். ஏற்கெனவே முதல் சிங்கிள் ட்ராக் சர்வைவா வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது. இரண்டாவது பாடலான  இயக்குநர் சிவா எழுதிய ’ விடுதலை’ சிங்கிள் ட்ராக் பெரும் வரவேற்பை பெற்றது. 

வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜீத்தை வைத்து விவேகம் படத்தை இயக்கி வருகிறார் சிவா. இப்படத்தின் படப்பிடிப்பு, டப்பிங் பணிகள் முழுமையாக முடிந்து விட்டன. மற்ற போஸ்ட் புரடெக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com