இந்திப் படத்தில் நடிக்கும் ஆசை இருப்பதாக, ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் மகன் ஜேடன் தெரிவித்துள்ளார்.
பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தின் மகன் ஜேடன். ’தி கராத்தே கிட்’ ஹாலிவுட் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்தப்
படம் ஹிட்டானதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் தெரிய வந்தார். இதையடுத்து மனோஜ் நைட் ஷியாமளன் இயக்கிய ’ஆஃப்டர்
எர்த்’ என்ற படத்தில் வில் ஸ்மித்துடன் இணைந்து நடித்தார். இந்தப் படமும் பேசப்பட்டது. ஜேடன், ராப் மற்றும் நடனக் கலைஞரும்
கூட. ஸைர் (Syre) என்ற இவரது ஆல்பம் கடந்த மாதம் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஜேடன், பாலிவுட் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாகக் கூறியுள்ளார். தனது ஆசையை ட்விட்டரில்
அவர் தெரிவித்துள்ளார்.