கர்நாடகாவில் ’காலா’வை திரையிட விடமாட்டோம்: வாட்டாள்

கர்நாடகாவில் ’காலா’வை திரையிட விடமாட்டோம்: வாட்டாள்

கர்நாடகாவில் ’காலா’வை திரையிட விடமாட்டோம்: வாட்டாள்
Published on

ரஜினிகாந்தின் ’காலா’வை கர்நாடக மாநிலத்தில் திரையிட்டால் போராட்டம் நடத்துவோம் என வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலத்தில் போதுமான அளவுக்கு தண்ணீர் இல்லை. மேலும் மாநில மக்கள் குடிநீருக்கு கூட தவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் லாபத்துக்காக, கன்னடர்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்.

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மாநில அரசு அடிப்பணிய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கிறார். கன்னடர்களுக்கு எதிராக பேசும் ரஜினிகாந்தின் ’காலா’ படத்தை கர்நாடக மாநிலத்தில் திரையிடக்கூடாது. மீறி திரையிட்டால் கன்னட அமைப்பினர் ஒன்றிணைந்து கடுமையான போராட்டம் நடத்தப்படும்’ என்றார். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com