\
காலா செகன்ட் லுக் இரவு 12 மணிக்கு வெளியீடு: தனுஷ்

காலா செகன்ட் லுக் இரவு 12 மணிக்கு வெளியீடு: தனுஷ்

காலா செகன்ட் லுக் இரவு 12 மணிக்கு வெளியீடு: தனுஷ்
Published on

நடிகர் ரஜினிகாந்தின் காலா செகண்ட் லுக் இன்று இரவு 12 மணிக்கு வெளியாக உள்ளது என தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் காலா. இந்தப் படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக்கில் ரஜினி லுங்கியுடன் கருப்புச் சட்டையில் வாகனத்தில் உட்கார்ந்திருப்பதைபோல வெளியிடப்பட்டது. அதில் தாடி, மீசையும் ரஜினி வயதான தோற்றத்தில் இருந்தார். எனவே இதன் திரைக்கதை தாதா காதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளதாக செய்தி வெளியானது. மேலும் காலா என்பது கரிகாலன் என்பதின் சுறுக்கம் என்றும், இவர் ஒரு தமிழர் என்றும் கூறப்பட்டது. எனவே இது உண்மையான தமிழர் ஒருவரின் கதை என்றும் பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால் இந்தக் கருத்துக்களுக்கு படக்குழு ஒரு பதிலையும் கூறவே இல்லை. 

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளரான தனுஷ், தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று இரவு 12 மணிக்கு ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட உள்ளது என அறிவித்துள்ளார். 
 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com