Anuja
Anuja Anuja

'Anuja' குறும்படம் ஆஸ்கர் விருதில் இந்தியாவின் நம்பிக்கை

LIVE ACTION SHORT FILM பிரிவில் 180 படங்களுடன் போட்டியிட்டு அடுத்தகட்டமான 15 பட பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது, ANUJA
Published on

இந்த முறை ஆஸ்கர் வெல்ல இந்தியாவுக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு!

97வது ஆஸ்கர் விருதுகளுக்கு பல்வேறு படங்கள் சமர்பிக்கப்பட்டன. இந்தியாவின் சார்பாகா சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவுக்கு கிரண் ராவ் இயக்கியிருந்த இந்தி படமான `லாப்பட்டா லேடீஸ்' அனுப்பப்பட்டிருந்தது. ஆமிர்கான் தயாரித்திருந்த இப்படம் திரையரங்குகளில் பெரிய வெற்றியடைந்தது. மக்கள் மத்தியிலும் பரவலான வரவேற்பைப் பெற்றது. மொத்தமாக சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் 85 க்கும் மேற்பட்ட படங்கள் சமர்பிக்கப்பட்டன.

மொத்தமிருக்கும் 23 ஆஸ்கர் விருது பிரிவுகளில் இருந்து, தற்போது DOCUMENTARY FEATURE FILM, DOCUMENTARY SHORT FILM, INTERNATIONAL FEATURE FILM, MAKEUP AND HAIRSTYLING, MUSIC (ORIGINAL SCORE), MUSIC (ORIGINAL SONG), ANIMATED SHORT FILM, LIVE ACTION SHORT FILM, SOUND, VISUAL EFFECTS ஆகிய 10 பிரிவுகளில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்ட படைப்புகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது ஆஸ்கர்.

சிறந்த சர்வதேச திரைப்பட (INTERNATIONAL FEATURE FILM) பிரிவின் கீழ் அடுத்த கட்டத்திற்கு தேர்வாகியுள்ள 15 படங்களின் பட்டியலில் `லாப்பட்டா லேடீஸ்' இடம்பெறவில்லை. அதேசமயம் சந்தோஷ் என்ற இந்தி மொழி திரைப்படம் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. சந்தியா சூரி இயக்கியுள்ள இப்படம் இங்கிலாந்து நாட்டின் சார்பாக அனுப்பப்பட்டுள்ளது. எனவே ஒருவேளை இந்தப் படம் ஆஸ்கர் வென்றாலும், அது இந்தியாவுக்கானதாக இருக்காது. ஆனால் இந்தப் படம் இந்தியாவைப் பற்றி பேசக்கூடியது. கணவன் இறந்த பிறகு அவனது போலீஸ் கான்ஸ்டபிள் வேலை மனைவிக்கு வருகிறது. உடனே நிகழும் ஒரு பெண்ணின் மரணமும், அதன் விசாரணைகளையும் பின்னணியாக வைத்து பல அரசியலை பேசுகிறது படம்.

இப்போது ஆஸ்கர் மீது இந்தியாவிற்கு இருக்கும் ஒரே நம்பிக்கை, `Anuja'. LIVE ACTION SHORT FILM பிரிவில் 180 படங்களுடன் போட்டியிட்டு அடுத்தகட்டமான 15 பட பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது, இந்த இந்தியப் படம். ஆடம் ஜெ கிரேவ்ஸ் இயக்கியுள்ள இந்த குறும்படம் குழந்தை தொழிலாளர்கள் பிரச்சனையை பற்றி பேசுகிறது. இது ஆஸ்கர் வெல்ல அதிக வாய்ப்பிருக்கு இன்னொரு காரணம் குனீத் மோங்கா கபூர். 95வது ஆஸ்கர் விருதுகளில், சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்ற The Elephant Whisperers தயாரிப்பாளரான குனீத் தான் இந்தக் குறும்படத்தின் Executive Producer. எனவே இம்முறையும் ஒரு ஆஸ்கரை அவர் பெற்றுத்தருவார் எனப் பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ஆஸ்கர் விருதுகளில் 23 பிரிவுகளிலும் இறுதிப்பட்டியலை முடிவு செய்யும் பணி ஜனவரி 8 முதல் 12 வரை நடைபெற உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து படங்கள் என இறுதியாகும் நாமினேஷன் பட்டியல் ஜனவரி 17ம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் ஆஸ்கர் விருது விழா மார்ச் 2ம் தேதி நடைபெற உள்ளது. எனவே இறுதிப்பட்டியலுக்கு எந்த படங்கள் செல்கிறது, எந்தெந்த படங்கள் வெற்றி பெறுகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com