\
’வேலைக்காரன்’ ரிலீஸ் தள்ளிப் போனது ஏன்?

’வேலைக்காரன்’ ரிலீஸ் தள்ளிப் போனது ஏன்?

’வேலைக்காரன்’ ரிலீஸ் தள்ளிப் போனது ஏன்?
Published on

சிவகார்த்திகேயன், மலையாள ஹீரோ பகத் பாசில், நயன்தாரா, சினேகா, பிரகாஷ் ராஜ் உட்பட பலர் நடித்துள்ள படம், ’வேலைக்காரன்’.

மோகன் ராஜா இயக்கியுள்ள இந்தப் படத்தை ஆர்.டி.ராஜா தயாரித்துள்ளார். கடந்த ஜனவரி 11-ம் தேதி இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. அப்போது தயாரிப்பாளர் ராஜா, செப்டம்பர் 29-ம் தேதி அன்று படம் வெளியாகும் என்று கூறியிருந்தார். ஆனால், அன்று படம் ரிலீஸ் ஆகாது என்று கூறப்பட்டுள்ளது. பின்னர் அக்டோபர் 29-ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது. இப்போது டிசம்பர் 22-ம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

படத்தை மூன்றரை மணி நேரத்துக்கும் மேலாக, இயக்குனர் எடுத்திருப்பதாகவும் அதைக் குறைக்கும் பணிகள் நடந்து வருவதாகவும் அது இழுத்துக்கொண்டு இருப்பதால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. 

படக்குழு தரப்பில் விசாரித்தபோது, ‘போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் இன்னும் முடியாததால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது’ என்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com