"சித்தப்பா நேசமணி செய்த அட்டூழியத்தால்தான் சுத்தியலை போட்டேன்"- கிருஷ்ணமூர்த்தி விளக்கம்

"சித்தப்பா நேசமணி செய்த அட்டூழியத்தால்தான் சுத்தியலை போட்டேன்"- கிருஷ்ணமூர்த்தி விளக்கம்
"சித்தப்பா நேசமணி செய்த அட்டூழியத்தால்தான் சுத்தியலை போட்டேன்"- கிருஷ்ணமூர்த்தி விளக்கம்

பல்வேறு சமயங்களில் நேசமணி சித்தப்பா செய்த அட்டூழியங்களால் தான் அவர் மீது சுத்தியலை போட்டதாக, ‘ஃப்ரண்ட்ஸ்’ படத்தில் நேசமணியின் சித்தப்பாவாக கிருஷ்ணமூர்த்தி கேரக்டரில் நடித்திருக்கும் ரமேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.

நடிகர் வடிவேலுவின் படங்கள் ஒன்றும் தற்போது ரீலிஸ் ஆகவில்லைதான். ஆனால் என்றுமே சமூக வலைதளங்களில் ஏதாவது ஒரு வடிவத்தில் இடம்பெற்றிருப்பார் வடிவேலு. அதற்கு காரணம் ரசிகர்களிடையே அவர் ஏற்படுத்தி சென்றிருக்கிற தாக்கம்தான். கொடுக்கப்பட்ட கேரக்டரில் கச்சிதமாக நடித்து ரசிகர்களை தம்பக்கம் இழுக்க வல்லவர். நேற்றிலிருந்து சமூக வலைதளங்களில் உலக அளவில் ட்ரெண்ட் அடிக்கிறது ‘ப்ரெண்ட்ஸ்’ படத்தின் நேசமணி கேரக்டர். இன்ஜினியரிங் லேனர்ஸ் என்ற ட்விட்டர் பக்கத்தில் சுத்தியல் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, அது நேசமணி தலையில் விழுந்தது என ஒரு நெட்டிசன் பதிலளித்துள்ளார். இதன்மூலம் ‘ஃப்ரண்ட்ஸ்’ படம் ரீலிசாகி 18 வருடங்கள் கழித்து நேசமணி கேரக்டரால் மீண்டும் சமூகவலைதளங்களை சுற்றிவர ஆரம்பித்திருக்கிறார் வடிவேலு.

இந்நிலையில் பல்வேறு சமயங்களில் நேசமணி சித்தப்பா செய்த அட்டூழியங்களால் தான் அவர் மீது சுத்தியலை போட்டதாக, ‘ஃப்ரண்ட்ஸ்’ படத்தில் நேசமணியின் சித்தப்பாவாக கிருஷ்ணமூர்த்தி கேரக்டரில் நடித்திருக்கும் ரமேஷ் கண்ணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது “ நான் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருக்கிறபோது நல்ல கனவு கண்டேன். அந்த சமயத்தில் எட்டி உதைத்தாரே நேசமணி.. அதனையெல்லாம் கேட்க மாட்டீர்களா..? நேசமணியால் அடிபட்டு ஒருவர் கோமாவில் படுத்திருக்கிறாரா..? அதனையெல்லாம் கேட்கமாட்டீர்களா..? பல்வேறு சமயங்களில் அவர் அட்டூழியங்கள் செய்தார். அதனை தாங்க முடியாமல்தான் நேசமணி சித்தப்பாவை பழி தீர்க்கவே அவர் தலையில் திட்டமிட்டு சுத்தியலை போட்டேன். ஏதோ தவறு செய்துவிட்டோம். அதற்காக மன்னிப்பு கேட்கிறோம். 

நேசமணிக்கு ஆகும் செலவுகளை விஜய் மற்றும் சூர்யாவிடம் வாங்கி கொடுத்துவிடலாம் என்றிருக்கிறேன். டைரக்டர் சித்திக்தான் மண்டையில் சுத்தியலை போடு என்றார். எனவே முதலில் அவரை தான் கைது செய்ய வேண்டும். 18 வருடங்களுக்கு பின் சுத்தியல்சீனுக்கு மீண்டும் வரவேற்பு என்பது, என்று இருந்தாலும் நல்ல படங்களுக்கு வரவேற்பு மாறாது  என்பதை காட்டுகிறது” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com