ரூ.4 கோடி பேசியும் ’குயின்’ ரீமேக்கை மறுத்தது ஏன்? எமி விளக்கம்

ரூ.4 கோடி பேசியும் ’குயின்’ ரீமேக்கை மறுத்தது ஏன்? எமி விளக்கம்
ரூ.4 கோடி பேசியும் ’குயின்’ ரீமேக்கை மறுத்தது ஏன்? எமி விளக்கம்

கங்கனா ரனவ்த் நடித்து இந்தியில் சூப்பர் ஹிட்டான படம், ‘குயின்’. இது இப்போது தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை தமிழ், கன்னடத்தில் ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். தமிழில் காஜல் அகர்வாலும் தெலுங்கில் தமன்னாவும் ஹீரோயினாக நடிக்கின்றனர். இந்தப் படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்க வைக்க, எமி ஜாக்சனிடம் கேட்டனர். ஒரிஜினலில் அந்த கேரக்டரில் லிசா ஹைடன் நடித்திருந்தார். இதில் நடிக்க, எமி ஜாக்சனுக்கு ரூ.4 கோடி வரை சம்பளம் பேசப்பட்டது. ஆனால் இதில் நடிக்க எமி ஜாக்சன் மறுத்துவிட்டார். 

இதுபற்றி எமி ஜாக்சன் கூறும்போது, ’நான் இந்தப் படத்தில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஒரிஜினலில் லிசா நடித்திருந்த வேடம் எனக்குப் பிடித்திருந்தது. நான் நடித்திருந்தால் அந்த கேரக்டருக்கு சரியாக இருக்கும் என்றும் நினைத்தேன். தயாரிப்பாளரும் இயக்குனரும் என்னைச் சந்தித்தினர். ஆனால், ’சூப்பர்கேர்ள்’ என்ற ஆங்கில படத்தில் நடிப்பதால் இந்தப் படத்துக்கு கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை’ என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com