பிக் பாஸ் சீசன் 8
பிக் பாஸ் சீசன் 8web

பிக்பாஸ் சீசன் 8 | கிராண்ட் ஃபைனலில் வென்ற வின்னர்? ரன்னர் யார்?

பிக்பாஸ் சீசன் 8-ன் கிராண்ட் ஃபனல் இன்று நடைபெற்ற நிலையில், வெற்றியாளர் யார் என்ற விவரம் வெளியாகியுள்ளது.
Published on

தமிழில் விறுவிறுப்பாக நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 8-ன் ஃபினாலே இன்று நடைபெற்றது. இந்த நிலையில்தான், டாப் 5-ல் வெற்றியாளர் முதல் ரன்னவர் வரை யார் யார் எந்த இடத்தை பிடித்தார்கள். கப்படித்தவர் யார் என்ற அனைத்து தகவல்களும் வெளியாகியுள்ளன.

பிக்பாஸ் சீசன் 8
பிக்பாஸ் சீசன் 8

தமிழில் இதுவரை நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி இருந்தார். இந்த முறை புது வரவாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்க, ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்ற பாணியில் தொடங்கியது 8வது சீசன். இதில் boys vs girls என்றபடி வீட்டைப் பிரித்து விளையாடிய நிலையில், பிறகு அனைவரும் ஒன்று சேர்ந்து விளையாடத்துவங்கினர். துவக்கத்தில் அவ்வளவு பெரிதாக கவனம் ஈர்க்காத 8வது சீசன், இறுதிக்கட்டத்தில் பரபரப்பாக நகரத்துவங்கியது.

விறுவிறுப்பாக இறுதிக்கட்டத்தை நெருங்கிய சீசனில், பணப்பெட்டி டாஸ்க்கை வைத்து, போட்டியாளர்களின் வயிற்றில் புலியை கரைத்தார் பிக்பாஸ். இதில், deserved person ஆன ஜேக்குலின், பணப்பெட்டியை எடுக்கச் சென்று சரியான நேரத்தில் திரும்ப முடியாததால் வெளியேற்றப்பட்டார்.

இந்த நிலையில்தான், முத்து, விஷால், சௌந்தர்யா, பவித்ரா மற்றும் ரயான் ஆகிய ஐவர் ஃபைனலுக்கு தகுதி பெற்றனர். இந்த சீசனில் துவக்கத்தில் இருந்து மக்கள் மனதை வென்ற முத்துக்குமரன் வெற்றிபெற வேண்டும் என்று பலரும் விருப்பம் தெரிவித்தனர். அதன்படியே, இறுதியாக முத்துவின் AVயைப் போட்டு, உங்களின் பயணத்தை ஒருவார்த்தையில் சொல்ல வேண்டுமானால் உழைப்பு என்று கூறி உச்சி முகர்ந்து பேசினார் பிக்பாஸ்.

முதலிடத்தை பிடித்த முத்துக்குமரன், இரண்டாவது இடத்திற்கு ட்விஸ்ட்!

24 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 8 ஆனது, 100 நாட்களை கடந்து இறுதிப்போட்டியை எட்டியது. 24 போட்டியாளர்களிலிருந்து 5 போட்டியாளர்களாக ஃபில்டர் செய்யப்பட்டு முத்துக்குமரன், சௌந்தர்யா, ரயன், விஷால், பவித்ரா ஜனனி முதலியோர் வெற்றிக்காக இறுதிப்போட்டியில் களம்கண்டனர்.

முத்துக்குமரன் - சௌந்தர்யா
முத்துக்குமரன் - சௌந்தர்யா

யாருக்கு டைட்டில் செல்லும் என்ற நிலையில், சில தினங்களாக முத்துக்குமரன் மற்றும் சௌந்தர்யா ஆதரவாளர்களுக்கு இடையே சோசியல் மீடியாவில் fan war நடந்து வந்தது. அதன்படியே இறுதிப்போட்டியிலும் அந்த இரண்டு பேருக்கும் இடையே பலத்த போட்டி இருந்தது.

முத்துக்குமரன்
முத்துக்குமரன்

எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்த பிக்பாஸ் சீசன் 8-ன் டைட்டில் வின்னராக முத்துக்குமரனே முதல் இடத்தைப் பிடித்து trophy ஐ தட்டித்தூக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாவது இடத்தை சௌந்தர்யாவும், மூன்றாவது இடத்தை விஜே விஷாலும், 4வது இடத்தை பவித்ராவும், 5வது இடத்தை ரயானும் பிடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com