கார்த்திக் தற்கொலைக்கு யார் காரணம்? விசாரணை எப்போது தொடங்கும்?

கார்த்திக் தற்கொலைக்கு யார் காரணம்? விசாரணை எப்போது தொடங்கும்?
கார்த்திக் தற்கொலைக்கு யார் காரணம்? விசாரணை எப்போது தொடங்கும்?

நடிகை நந்தினியின் கணவர் தற்கொலை விவகாரத்தில், உடற்கூறு ஆய்வு அறிக்கை கிடைத்த பின்னரே, முழுமையான விசாரணை தொடங்கும் என காவல்துறை கூறியிருக்கிறது.

தற்கொலை செய்து கொண்ட கார்த்திக், தற்கொலைக்கு நந்தினி தந்தை ராஜேந்திரன் என காரணம் கூறியிருந்தார் கார்த்திக். இந்த குற்றச்சாட்டை நடிகை நந்தினி தரப்பு மறுத்திருக்கிறது. கார்த்திக்கின் மரணத்தை தற்கொலை வழக்காக பதிவு செய்திருக்கும் விருகம்பாக்கம் போலீசார், உடற்கூறு ஆய்வு கைக்கு கிடைத்த பின்னரே, முழுமையான விசாரணை தொடங்கும் என கூறியிருக்கின்றனர்.

சென்னை தியாகராய நகரில் ஜிம் நடத்தி வந்த கார்த்திக், ஜிம்முக்கு வந்த இடத்தில் நடிகை நந்தினியைக் காதலித்து திருமணமும் முடித்துள்ளார். திருமணமான சில மாதங்களில், பிரச்னை ஏற்பட்டதாக தெரிகிறது.

நந்தினிக்கு முன்னர், வெண்ணிலா என்ற பெண்ணை காதலித்துள்ளார் கார்த்திக். தன்னை திருமணம் செய்யுமாறு அந்த பெண் கூறியபோது, அதற்கு கார்த்தி மறுப்புத் தெரிவிக்க, தற்கொலை செய்து கொண்டுள்ளார் வெண்ணிலா. சில ஆண்டுகளுக்கு முந்தைய அந்த வழக்கில், கைதாகி, சிறைக்கு சென்று, வெளியில் வந்ததை, மறைத்த கார்த்திக், நடிகை நந்தினியை மணந்துள்ளதாக தெரிகிறது.

இந்த விவகாரம் வெளியில் தெரிந்த நிலையில், தொழிலிலும் கடும் நஷ்டத்தை கார்த்திக் எதிர்கொள்ள, அவரிடமிருந்து விலகியுள்ளார் நடிகை நந்தினி. இந்நிலையில், சென்னை வளசரவாக்கம் தனியார் விடுதி ஒன்றில், கார்த்திக் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே, இது கார்த்திக்-கின் இரண்டாவது தற்கொலை முயற்சி என்றும் சொல்லப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com