அஜித்தின் AK 62-ஐ இயக்கப் போவது இவரா? அண்மைத் தகவலால் ரசிகர்கள் ஆரவாரம்..!

அஜித்தின் AK 62-ஐ இயக்கப் போவது இவரா? அண்மைத் தகவலால் ரசிகர்கள் ஆரவாரம்..!

அஜித்தின் AK 62-ஐ இயக்கப் போவது இவரா? அண்மைத் தகவலால் ரசிகர்கள் ஆரவாரம்..!

ட்விட்டர் தளத்தில் எங்கு காணினும் அஜித்தின் 62வது படம் குறித்த பேச்சாகத்தான் இருக்கிறது. இதனால் #AK62 , #Ajithkumar போன்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங்கிலேயே இருந்து வருகிறது.

நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என தொடர்ச்சியாக ஹெச்.வினோத் இயக்கத்திலேயே நடித்திருந்த நடிகர் அஜித்குமார் அவரது 62வது படத்துக்காக விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் நடிக்கப் போவதாகவும், அதை லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்க இருந்ததாகவும் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கப் போகிறார் என்றதும் ரோம்-காம் பாணியிலான கதையாக இருக்குமோ என்றெல்லாம் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்து வந்தார்கள். ஷூட்டிங் பணிகளும் விரைவில் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் கசிந்தன.

இப்படி இருக்கையில், அஜித்தின் AK62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவில்லை என்றும் அதற்கு பதிலாக AK63 படத்தைதான் விக்னேஷ் சிவன் இயக்கப் போகிறார் என்றும் நேற்றிலிருந்து தகவல்கள் உலா வந்த வண்ணம் இருந்தன.

இந்த நிலையில், தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனிதான் அஜித்தின் 62வது படத்தை இயக்கப் போகிறார் என்று சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தனித்துவமான, ஆக்‌ஷன் படங்களை இயக்கி வந்த மகிழ் திருமேனி முதல் முறையாக தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான அஜித்தை வைத்து இயக்கப் போகிறார் என்ற செய்தி ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது. இதுபோக, ஏகே 62 படத்தை விஷ்ணு வர்தன் இயக்கப் போவதாகவும் கூறப்பட்டு வருகிறது.

ஆனால் AK62-ஐ இயக்கப்போவது விக்னேஷ் சிவன்தான் என லைகா நிறுவனம் கடந்த ஆண்டே அறிவித்திருந்தாலும் தற்போது நிலவி வரும் பரபரப்புகளுக்கு விக்னேஷ் சிவன் மற்றும் தயாரிப்பு நிர்வாகம் தரப்பு மவுனம் சாதித்து வருவதால் AK62 கைமாறியிருப்பது உண்மைதான் போல என்றும் அஜித் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

முன்னதாக சிவகார்த்திகேயனை வைத்து அவரது 17வது படமாக Love Insurance Company (LIC) என்ற ஃபாண்டசி ரொமான்டிக் கதையை விக்னேஷ் சிவன் இயக்க இருந்தது. ஆனால் பட்ஜெட் காரணமாக கதை விவாதத்துடனேயே அந்த படம் கிடப்பில் போடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com