\
dhanush
dhanushom pre release event

என்னை இயக்குவது யார்..? விமர்சனங்களுக்கு பளீச்சென பதிலடி கொடுத்த தனுஷ்!

நடிகர் தனுஷ் அரசியலுக்கு வரவிருப்பதாக யூகங்கள் இருந்துவரும் நிலையில், அதுகுறித்து பொதுவெளியில் பல விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.
Published on: 
Summary

தனுஷ் அரசியலுக்குள் நுழைவதற்கு யாரோ இயக்குகிறார்கள் என்ற விமர்சனங்களுக்கு பதிலளித்த அவர், தன்னை இயக்குவது இறைவன், தன் பின்னால் ரசிகர்களும் மக்களும் உள்ளனர் எனத் தெரிவித்தார். மேலும், புதிய முயற்சிகளுக்கு எதிர்ப்பு இயல்பானது என்றும், தன்னைப் பற்றிய வதந்திகளைப் பொருட்படுத்த மாட்டேன் என்றும் கூறினார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், கடந்த ஓராண்டாகத் தமிழகம் முழுவதும் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்து வருகிறார். ரசிகர் மன்றத்தை வலுப்படுத்தும் வகையில் உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்துவது, நலத்திட்டப் பணிகளை விரிவுபடுத்துவது, மன்றத்தில் பெண் நிர்வாகிகளை அதிக அளவில் இணைப்பது உள்ளிட்ட பணிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

தனது பிறந்தநாளுக்கு முன்பு நடைபெற்ற பிரம்மாண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தனுஷ் பேசியது, அவரது அரசியல் வருகைக்கான முன்னெடுப்பாக இருக்கலாம் என்ற விவாதத்தை ஏற்படுத்தியது. அரசியல் கட்சியை எப்போது தொடங்குவீர்கள் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கும் அவர் பதிலளிக்காமல் சிரித்தபடி சென்றார்.

dhanush
dhanushchat gpt

இதற்கிடையே, சமீபத்தில் கோவையில் நடைபெற்ற ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூட்டத்தில், தனுஷ் ரசிகர் மன்றம் இனி இயக்கமாகச் செயல்படும் என அதன் தலைவர் சுப்பிரமணிய சிவா அறிவித்ததுடன், இயக்கத்தின் லோகோவையும் வெளியிட்டார். தனுஷ் அரசியலில் இறங்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாகப் பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவர் டெல்லி சென்றது பல்வேறு விவாதங்களைக் கிளப்பியது.

இந்தச்சூழலில் தான், தனுஷ் நற்பணி இயக்கத்தின் பெண் நிர்வாகிகள் சந்திப்பு சென்னை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில், 3 ஆயிரம் பெண் நிர்வாகிகள் கலந்துகொண்டதும் கவனம் ஈர்த்தது. அந்நிகழ்ச்சியில் எதாவது அறிவிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், எதையும் பேசாமல் சென்றுவிட்டார். மேலும் அரசியலுக்கு அவர் வருவாரா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கும், எவ்வித நேரடி அரசியல் கருத்தையும் தெரிவிக்காமல், "ரொம்ப சந்தோஷமா இருந்தது.. எல்லாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்" என்று மட்டும் கூறிவிட்டுச் சென்றார்

இதற்கிடையில் தான் திரை நட்சத்திரமாக இருந்து அரசியல் கட்சி தொடங்கி தமிழக முதல்வராக இருக்கும் ச. ஜோசப் விஜய்க்கு நடிகர் தனுஷ் அரசியல் போட்டியாக வரப்போகிறார் என்ற கருத்துகள் வைக்கப்பட்டன. திமுகவிலும் கனிமொழி உள்ளிட்ட பல தலைவர்கள் தனுஷ்குறித்து கருத்துகள் தெரிவித்த நிலையில், தவெக நிர்வாகிகளும் தனுஷ் எங்களுக்கு போட்டியாக இருக்கமாட்டார் என்ற கருத்துகளை தெரிவித்தனர்.

இந்தசூழலில் தனுஷ் அரசியலுக்குள் நுழைவதற்கு பின்னால் யாரோ இயக்குகிறார்கள் என்ற விமர்சனமும் வைக்கப்பட்டது. இப்படி தன்னைச்சுற்றியிருக்கும் விமர்சனங்களுக்கெல்லாம் பதலளிக்கும் விதமாக ஓம் திரைப்பட நிகழ்ச்சியில் பேசியிருக்கும் தனுஷ், தன்னைப் பற்றி பல்வேறு கருத்துகளும் வதந்திகளும் பரப்பப்படுவதாகக் குறிப்பிட்டதோடு, தன்னை யாரோ இயக்குவதாகவும், தனக்குப் பின்னால் சிலர் இருப்பதாகவும் கூறப்படுவதைச் சுட்டிக்காட்டினார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக, “என் பெயரில் நிறைய வதந்திகள் உலவுகின்றன. சமீப காலமாக, இவர அவங்க இயக்குறாங்க, இவர் பின்னாடி இவங்க இருக்காங்கனு போய்டு இருக்கு.. என்னை இயக்குவது இறைவன். என் பின்னால் இருப்பது ரசிகர்கள். என் பக்கம் மக்கள் இருக்கிறார்கள். மக்கள் என் பக்கம்” என்று தெரிவித்தார்.

மேலும், “எண்ணம் போல் வாழ்க்கை, தன்னைப் பற்றி யார் என்ன பேசினாலும் அதற்காகப் பேசாமல் இருக்க முடியாது என்றும், புதிதாக ஒன்று உருவாகும்போது அதிர்வுகள் ஏற்படுவது இயல்புதான் என்றும் அவர் கூறினார்.