பவன் கல்யாண், சமந்தா, பிரணீதா, நந்தியா நடித்து தெலுங்கில் சூப்பர் ஹிட்டான படம், ’அத்தரிண்டிகி தரேடி’. 2013-ல் வெளியான இந்தப் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார். திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கி இருந்தார்.
இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை லைகா புரொடக்ஷன்ஸ் இப்போது பெற்றுள்ளது. குடும்ப கதையை கொண்ட இந்தப் படத்தில் நடிக்க முன்னணி ஹீரோக்களிடம் அந்நிறுவனம் பேசி வருகிறது.
கார்த்தி நடித்து சமீபத்தில் வெளியான ’கடைக்குட்டி சிங்கம்’ நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் குடும்ப கதைகளில் நடிக்க ஹீரோக்கள் ஆர்வம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்தப் படத்தில் விஜய் நடித்தால் சரியாக இருக்கும் என்று ரசிகர்கள் பலர் இணையதளத்தில் கருத்துத் தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் அஜீத்துக்குத்தான் பொருத்தமாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.

