'வி' வரிசையில் அஜீத் படங்கள் இருப்பதற்குக் காரணம் என்ன?
சமீபத்தில் அஜித் நடித்து வரும் படங்களிள் தலைப்பு ‘வி’ என்ற எழுத்தில் தொடங்கும் படி பெயர் வைக்கப்படுகிறது. அதற்கான காரணம் சென்டிமென்டா என்பது குறித்து இயக்குனர் சிவா விளக்கியிருக்கிறார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த ‘வீரம்’,‘வேதாளம்’ படங்கள் வெற்றி பெற்றன. இதனைத் தொடர்ந்து இவரது இயக்கத்தில் அஜீத் நடித்திருக்கும் ‘விவேகம்’ படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. சிவா இயக்கத்தில் உருவான அஜீத்தின் 3 படங்களின் பெயர்களும் ‘வி’ என்ற எழுத்தில்தான் தொடங்கி உள்ளன. இதற்கு காரணம் ‘சென்டிமெண்ட்’ என்று பெரும்பாலானோர் எண்ணுகிறார்கள். இது பற்றி கூறிய இயக்குனர் சிவா, "நான் அஜீத் சாரை மனதில் நினைத்துக் கொண்டு கதை தயார் செய்வேன். பின்னர் அதை ஒருவரியில் அவரிடம் சொல்வேன். அது அவருக்கு பிடித்தால், திரைக்கதை அமைத்து விரிவாக கொடுப்பேன். அவர் ‘ஓகே’ சொன்னால் மற்ற வேலைகளை தொடங்குவேன். அடுத்து, அந்த கதைக்கு பொருத்தமான ‘டைட்டில்’களை எழுதி அஜீத் சாரின் கவனத்துக்கு கொண்டு போவேன். சரியான தலைப்பை அவர் தேர்வு செய்வார். அப்படித்தான் இதுவரை நடந்திருக்கிறது. மற்றபடி திட்டமிட்டோ அல்லது சென்டிமெண்டுக்காகவோ முதலில் ‘வி’ எழுத்து வரும்படி படங்களுக்கு பெயர் வைக்கவில்லை. இது தற்செயலாக நடந்தது”என்று விளக்கமளித்துள்ளார்.