சிவகார்த்திகேயனிடம் மன்னிப்புக் கேட்ட கமல்: ஏன்? எதற்கு?

சிவகார்த்திகேயனிடம் மன்னிப்புக் கேட்ட கமல்: ஏன்? எதற்கு?

சிவகார்த்திகேயனிடம் மன்னிப்புக் கேட்ட கமல்: ஏன்? எதற்கு?
Published on

கமல்ஹாசன் தன்னிடம் மன்னிப்புக் கேட்டதாக நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்திருக்கிறார். 

கடந்த 2015 ஆண்டு செப்டம்பர் மாதம் மதுரையில் நடிகர் சிவகார்த்திகேயனை கமல்ஹாசனின் ரசிகர்கள் விமான நிலையத்தில் வைத்து தாக்கினர். அதற்கான வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. தொடர்ந்து கமல்ஹாசனை தனது படங்களில் சிவா கிண்டலடித்து வருவதினால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அப்போது கூறப்பட்டது. அந்தச் சம்பவம் சம்பந்தமாக நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது விளக்கம் அளித்துள்ளார். தான் தாக்கப்பட்டதை அறிந்த கமல் தன்னிடம் தொலைப்பேசியில் பேசியதாக கூறியிருக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “அப்போது ரசிகர்கள் நடந்திய தாக்குதலுக்காக கமல் சார் என்னிடம் மிகுந்த வருத்தத்துடன் மன்னிப்பு கேட்டார்”என்று அவர் கூறியுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com