நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் வருகின்ற ஜூன் 7ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘காலா’திரைப்படத்தின் இசை மே 9 இல் எங்கே ? வெளியாகும் என்ற தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்தவுள்ள திரைப்படம் ‘காலா’. இந்தப் படத்தினை நடிகர் தனுஷின் 'வுண்டர்பார் பிலிம்ஸ்' தயாரித்துள்ளது. ஏற்கெனவே வெளியாகி இருந்த ‘செம்ம வெயிட்’ பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், ‘காலா’ பட இசை வெளியீட்டு விழா வருகின்ற மே 9 ஆம் தேதி சென்னையில் உள்ள நந்தனம் YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
‘காலா’ படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். பா.ரஞ்சித் இயக்கியுள்ள அனைத்து படங்களுக்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சந்தோஷ் நாராயணன் தனது (Dopeadelicz & RAP) இசை குழுவினருடன் இணைந்து காலா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நேரடி இசை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளார். "வுண்டர்பார் ஸ்டுடியோஸ்" நிறுவனமும் அதன் டிஜிட்டல் பங்குதாரரான டிவோ (DIVO) நிறுவனமும் இணைந்து காலா படத்தின் பாடல்களையும், இசைநிகழ்ச்சியினை நேரடியாக இணையதளங்களில் வெளியிட உள்ளனர். இந்த இசைவெளியீட்டு விழாவானது நேரலையாக டுவிட்டர், பேஸ்புக், யூடியூபில் ஒளிபரப்பப்பட உள்ளது. மேலும் இசை வெளியீட்டு விழாவின் நேரலையை கீழ்கண்ட லிங்க்-களில் காண அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இசை வெளியீட்டு விழாவை நேரலையில் காண :-
https://www.facebook.com/OfficialWunderbarFilms
https://twitter.com/wunderbarfilms
https://www.youtube.com/wunderbarstudios