“என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்?” - சிம்பு ஆவேசம்

“என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்?” - சிம்பு ஆவேசம்

“என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்?” - சிம்பு ஆவேசம்
Published on

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு எதிராக நடிகர் சிம்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 22ஆம் தேதி போராட்டம் நடைப்பெற்றது. இந்தப் போராட்டத்தில் கல்வீச்சு சம்பவங்கள், வாகனங்கள் எரிக்கப்பட்டதையடுத்து காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். துப்பாக்கிச் சூட்டில் 13க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் காயமடைந்த 80க்கும் அதிகமானோர் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். போராட்டத்தின் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 23 - 25ஆம் தேதி வரை 144தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்திற்கு உலக அளவில் பெரும் கண்டனங்கள் எழுந்துள்ளன. மக்கள் மாநிலம் தாண்டி போராடி வருகின்றனர். பெங்களூருவில் கூட இன்று ஸ்டெர்லைட்டிற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில், இச்சம்பவம் குறித்து தனது மன வருத்தத்தை வீடியோ மூலம் பகிர்ந்து கொண்டுள்ளார் சிம்பு. அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “பிரச்னைகள், போராட்டம், இப்போது மரணமும் தமிழ்நாட்டில் நடந்துள்ளது. அப்பாவி மக்கள்கள் தங்களின் அடைப்படை உரிமையான சுற்றுச்சூழல், உடல் நலத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக போராடுகிறார்கள். அவர்களை கொன்றது அதிர்ச்சியளிக்கிறது. இந்த மாநிலத்தில் என்னதான் நடக்கிறது? மக்கள் போராடிக் கொண்டிருந்தார்கள், இறுதியில் செத்துப்போகவா? செத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. உண்மையில் ரொம்ப மனவலியை தருகிறது. நமக்கு தேவை மாற்றம். இந்த அரசு உடனே அகற்றப்பட வேண்டும். என்னுடைய ஆர்வம் தீர்வை நோக்கி உள்ளது. எனக்கு மற்றதை பற்றிக் கவலை இல்லை” என்று அந்த வீடியோவில் ஆவேசமாக பேசிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com