’வானம் என்ன அவன் அப்பன் வீட்டுச் சொத்தா?’ - மிரள வைக்கும் சூரரைப் போற்று ட்ரெய்லர்
“சூரரைப் போற்று” இந்தப் பேரு நம்ம காதுல ரொம்ப நாளா ஒலிச்சிக்கிட்டே இருந்துச்சு. ஆனா படம் என்னக் கதை சூர்யா இந்தப் படத்துல எப்படி வருவாரு அப்படிங்கிற ஐடியா யாருக்குமே இல்ல. அப்பதான் இந்தக் கதை ஏர்.டெக்கான் கோபிநாத்தின் பயோபிக்குனு ஒரு தகவல் வந்துச்சு. ஓ சூர்யா பயோபிக்கல, ம்ம்ம்... நல்லாருக்கும் நல்லாருக்கும் அப்படினு எல்லோரும் பேசுனாங்க. அதுக்கப்புறம் படத்தோட டீஸர் வெளியாச்சு.
அவ்வளவுதான் சூர்யாவோட பல படங்கள் தோல்வி அடைஞ்சனதாலா துவண்டு போய் உட்காந்திருந்த அவரோட ரசிகர்கள் “ சிங்கம் இஸ் பேக்” அப்படினு சோசியல் மீடியாவுல ஆர்ப்பரிக்க ஆரம்பிச்சாங்க. டீஸரும் அந்த அளவுக்கு தரமாதான் இருந்துச்சு.
"ஒருத்தன் ஒன்னுமே இல்லாமா ஒரு ப்ளைட் கம்பெனி ஆரம்பிக்க முடியுமா மக்கா.." இந்த ஒத்த லைனைப் புடிச்சு சுதா கொங்கரா சூர்யா இயக்கிருந்த தொனி டீஸர்ல சூர்யாவை நீலத்தீயாக நிக்க வைச்சது. வாரணம் ஆயிரம் படத்துக்கு அப்புறம் மிலிட்டரி ட்ரெஸ்ல சூர்யாவ பாத்தப்போ பாரேன் இந்த மனுஷன் இன்னும் அப்படியே இருக்கான் அப்படினு எல்லாரையும் சொல்ல வைச்சது.
டீஸருக்கு கிடைச்ச அந்த வரவேற்புதான் இன்னைக்கு வெளியான ட்ரெய்லர் மேல அதிக எதிர்பார்ப்ப உருவாக்கியிருந்துச்சு. இப்போ ட்ரெய்லரும் வெளியாகிருச்சு. ’நெடுமாறன் ராஜாங்கம் பேரு கேள்விப்பட்டிருக்கியா’ அப்படிங்கிற கேள்வியோட ஆரம்பிக்கிற ட்ரெய்லர் சூர்யாவோடு வெவ்வேறு பரிணாமங்கள பிரதிபலிக்குது. நிச்சயமா இந்த கெட்டப்புகள் ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட்டா இருக்கும். குறிப்பா சொல்லனும்னா அந்த மிலிட்டரி போர்ஷன். தான் நம்புற கனவை வெளிப்படுத்தும் சூர்யாவ உதாசினப்படுத்துற நமட்டுச் சிரிப்பு, அவமானம், நிராகரிப்பு அப்படி அடுத்ததடுத்த காட்சிகளா விரியுற ட்ரெய்லர் அபர்ணாவுக்கும் சூர்யாவுக்கும் இடையே இருக்கிற ராவான காதல வசனங்கள் மூலமாவும், அவர்களோட செயல்கள் மூலமாவும் வெளிப்படுத்துச்சு.
அப்புறம் ட்ரெய்லர், 1 ரூபாய்க்கு ப்ளைட் டிக்கெட் அப்படிங்கிற படத்தோட கோர் பாய்ண்ட பிடிக்குது. கனவுக்காக அலையும் சூர்யா, அவரோட கனவு மேல அவர் அம்மா ஊர்வசி வைச்சுருக்கும் பயம் கலந்த நம்பிக்கை, கனவை சிதைக்க நினைக்குறவங்களோட சூர்யா போராடும் போராட்டம் அப்படினு காட்சிக்கு காட்சி எமோஷன் தான் மக்களே.
“வானம் என்ன அவ அப்பன் வீட்டுச் சொத்தா நீ ப்ளைட்ட எறக்குடா” அப்படினு சூர்யா கொந்தளிக்கிற காட்சியில கனவுக்காக இந்த “மாறா” எந்த எல்லை வரைக்கும் பாயுவான் அப்படினு சொல்லாம சொல்லுது ட்ரெய்லர். இந்த சாமி ஜெயிக்கட்டும்..
- கல்யாணி பாண்டியன்

