\
லோகி சினிமேட்டிக் யூனிவெர்ஸ் இண்ட்ரோ இப்படிதான் இருக்குமோ? - கவனம் பெறும் Fan Made Video!

லோகி சினிமேட்டிக் யூனிவெர்ஸ் இண்ட்ரோ இப்படிதான் இருக்குமோ? - கவனம் பெறும் Fan Made Video!

லோகி சினிமேட்டிக் யூனிவெர்ஸ் இண்ட்ரோ இப்படிதான் இருக்குமோ? - கவனம் பெறும் Fan Made Video!
Published on

விக்ரம் பட வெற்றிக்கு பிறகு கோலிவுட்டின் தவிர்க்க முடியாத இயக்குநராக உருவெடுத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். பட்டித்தொட்டி எங்கும் தற்போது ஹாட் டாபிக் ஆஃப் தி டவுனே லோகேஷ் கனகராஜ்தான்.

மாநகரம் தொட்டு விக்ரம் வரை அவரது படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே அத்தனை பிரபலம். அதிலும் கைதி படத்தின் கதையை விக்ரம் படத்தோடு இணைத்து அடுத்தடுத்த பாகங்களாக படமெடுக்கும் வகையில் அத்தனை க்ளூவையும் ரசிகர்கள் முன் கொடுத்து அடுத்து என்ன படம் வரும் என்ற ஆவலில் அனைவரும் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.

இதனிடையே ஹாலிவுட்டின் மார்வல் சினிமாட்டிக் யூனிவெர்ஸை போன்று சீக்வல், ப்ரீக்வல் கதைகளாக லோகேஷ் கனகராஜின் படங்கள் இருப்பதால் ரசிகர்கள் அதனை லோகி சினிமாட்டிக் யூனிவெர்ஸ் என்றே அழைக்கிறார்கள்.

அதற்கு எடுத்துக்காட்டாக கைதி படத்தின் க்ளைமேக்ஸில் தில்லியை கண்டது அடைக்கலம் அதிர்ச்சியடைவதும், விக்ரமின் க்ளைமேக்ஸில் ரோலக்ஸ் கதாப்பாத்திரத்தை புகுத்தி அதில் அடைக்கலம், அன்பு இடம்பெற்றிருப்பதும் அடுத்த பாகத்துக்கான லீடை லோகேஷ் கொடுத்திருப்பார்.

இந்த நிலையில் மார்வல் படங்களின் தொடக்கத்தின் போது அதன் கதாப்பாத்திரங்களை குறிப்பிடும் வகையில் இண்ட்ரோ காட்சிகள் இருக்கும். அதுபோல லோகேஷ் கனகராஜின் படங்களில் இண்ட்ரோ காட்சிகள் இருந்தால் அது இப்படியாகத் தான் இருக்கும் எனக் குறிப்பிட்டு ஃபேன் மேட் வீடியோ ஒன்றை swak என்ற ட்விட்டர் பயனர் கச்சிதமாக எடிட் செய்து வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ ஒன்றரை லட்சத்துக்கும் மேலானோரால் பார்க்கப்பட்டு பகிரப்பட்டிருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com