\
ராணாவுடன் காதலா?: ரகுல் ப்ரீத் சிங் பதில்

ராணாவுடன் காதலா?: ரகுல் ப்ரீத் சிங் பதில்

ராணாவுடன் காதலா?: ரகுல் ப்ரீத் சிங் பதில்
Published on

நடிகர் ராணாவுடன் நடிகை ரகுல் ப்ரீத் சிங் காதலில் விழுந்துள்ளதாக தகவல் பரவி வருகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். இவரின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் சில படங்களில் இவர் ஒப்பந்தமாகி இருக்கிறார். தமிழில் அதிகம் கவனம் செலுத்துவதற்காக இவர் தெலுங்கு படங்களை தவிர்த்து வருவதாக செய்தி பரவியது. அதனை முற்றிலும் மறுத்திருந்தார் ரகுல். இந்நிலையில் இவர் நடிகர் ராணாவை காதலிப்பதாக செய்திகள் வலம் வர தொடங்கி உள்ளனர். அதை பற்றி ரகுல் இப்போது பதிலளித்திருக்கிறார். “அது வெறும் வதந்திதான்”என கூறிய அவரிடம் பல நேரங்களில் ஒன்றாக வலம் வருகிறீர்களே? என்று மீடியாக்கள் கேள்வி எழுப்பினர். ‘‘எங்கள் குழுவில் 18 பேர் இருக்கிறோம். அத்தனை பேரும் கல்யாணமாகாதவர்கள். ஆகவே எங்கு சென்றாலும் ஒன்றாக சேர்ந்து சுற்றுவோம். அதை வைத்து வதந்தி பரப்பிவிட்டார்கள். அதில் உண்மையில்லை” என கூறி இந்தக் காதல் செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ரகுல்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com