படப்பிடிப்பு தளத்தில் பின்பற்ற வேண்டியவை.. நெறிமுறைகள் வெளியீடு

படப்பிடிப்பு தளத்தில் பின்பற்ற வேண்டியவை.. நெறிமுறைகள் வெளியீடு

படப்பிடிப்பு தளத்தில் பின்பற்ற வேண்டியவை.. நெறிமுறைகள் வெளியீடு
Published on

சினிமா படப்பிடிப்பு தளத்தில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் குறித்து மத்திய செய்தி மற்றும் தொலைக்காட்சித் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேசியுள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் “ சினிமா மற்றும் தொலைக்காட்சித் தொடர் படப்பிடிப்புகளில் குறைந்த அளவு பணியாளர்களே இடம் பெற வேண்டும், அவர்கள் நிச்சயம் முகக் கவசம் அணிய வேண்டும், அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். எச்சில் துப்பக்கூடாது உள்ளிட்ட நெறி முறைகளை கடைபிடிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக முடக்கப்பட்டிருந்த சினிமா துறையில் படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகளை செய்து கொள்ளவும், தொலைக்காட்சி தொடர் படபடப்பிடிப்புகளில் மிகக் குறைவான  தொழிலாளர்களை இடம்பெற செய்து படப்பிடிப்பு செய்து கொள்ளவும்  அரசு அனுமதியளித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com