“என்ன படம்டா” - சூரரைப்போற்று படம் குறித்து குஷ்பு ட்வீட்

“என்ன படம்டா” - சூரரைப்போற்று படம் குறித்து குஷ்பு ட்வீட்
“என்ன படம்டா” - சூரரைப்போற்று படம் குறித்து குஷ்பு ட்வீட்

சூரரைப் போற்று படம் குறித்து நடிகை குஷ்பு அவரது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் அண்மையில் ஓடிடி தளத்தில் வெளியானப் படம் சூரரைப் போற்று. ஏர்.டெக்கான் உரிமையாளர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் குறித்து தற்போது நடிகையும், பாஜக உறுப்பினருமான குஷ்பு  அவரது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அவர் பதிவிட்டுள்ள பதிவில் “ என்ன.. படம்... சூர்யா அபாரம்... உங்களது கண்களே பேசிவிட்டன... ஒவ்வொரு ப்ரேமிலும் எமோஷன். இப்படி ஒரு மாஸ்டர் பீஸை கொடுத்ததற்காக சுதா கொங்கராவுக்கு எனது கைத்தட்டல்கள். நடிகைகள் அபர்ணா மற்றும் ஊர்வசி ஆகியோரும் அபாரமாக நடித்துள்ளனர். நிச்சயம் பார்க்க வேண்டிய படம். படக்குழுவிற்கு எனது பூங்கொத்துக்கள்.... ” என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com