\
விஜய் விருந்து... என்ன ஒரு மறக்க முடியாத நாள்? பூரிக்கும் பாடலாசிரியர் விவேக்

விஜய் விருந்து... என்ன ஒரு மறக்க முடியாத நாள்? பூரிக்கும் பாடலாசிரியர் விவேக்

விஜய் விருந்து... என்ன ஒரு மறக்க முடியாத நாள்? பூரிக்கும் பாடலாசிரியர் விவேக்
Published on

விஜய் விருந்து கொடுத்த நாளை என்ன ஒரு மறக்க முடியாத ஒரு நாள் என்று பாடலாசிரியர் விவேக் பூரித்துப் போய்ச் சொல்லியிருக்கிறார்.

கவிஞர் விவேக் எழுதிய ‘ஆளப்போறான் தமிழன்’ உட்பட அனைத்து பாடல்களும் மெர்சலில் பெரிய ஹிட் ஆனது. பட வெற்றியை கொண்டாடும் வகையில் விஜய் படக்குழுவை சேர்ந்த அனைவரையும் அழைத்து வீட்டில் விருந்து கொடுத்தார். அந்த விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான், எஸ்.ஜே.சூர்யா, அட்லீ, விஜய் என பலரும் கலந்து கொண்டனர். இந்த விருந்து குறித்து ட்விட்டர் பக்கத்தில் பாடலாசிரியர் விவேக், “ மறக்கவே முடியாத என்ன ஒரு நாள்” என்று புகழ்ந்து கூறியுள்ளார். மேலும் “இசைப்புயல் மற்றும் தளபதி கொடுத்த அளவுகடந்த அன்புதான் இந்த வாய்ப்பு. அதற்காக நன்றி விஜய் சார் ” என்று குறிப்பிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com