\
பெஃப்சிக்கு ஆதரவாக மேற்கிந்திய திரைப்பட தொழிலாளர்கள்

பெஃப்சிக்கு ஆதரவாக மேற்கிந்திய திரைப்பட தொழிலாளர்கள்

பெஃப்சிக்கு ஆதரவாக மேற்கிந்திய திரைப்பட தொழிலாளர்கள்
Published on: 

பெஃப்சிக்கு ஆதரவாக தமிழ் திரைப்பட படப்பிடிப்புகளில் பணியாற்ற மாட்டோம் என மேற்கிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது   

பெஃப்சி தொழிலாளர்களை மட்டுமே தயாரிப்பாளர்கள் பயன்படுத்த வேண்டும், ஏற்கனவே இருந்த ஊதிய முறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெஃப்சி தொழிலாளர்கள் 2 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தயாரிப்பாளர்கள் படப்பிடிப்புகளை நடத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், வேறு மாநிலத் திரைப்படத் தொழிலாளர்களை வைத்து படப்பிடிப்பை நடத்த தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்திருந்தது. ஆனால், தமிழ் திரைப்பட படப்பிடிப்புகளில் வேறு‌ மாநில தொழிலாளர்கள் பணியாற்றக் கூடாது என ஃபெஃப்சி கோரிக்கை விடுத்திருந்தது. அந்தக் கோரிக்கையை ஏற்று தமிழ் திரைப்பட படப்பிடிப்புகளில் பணியாற்ற மாட்டோம் என மேற்கிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது. அதனால், ரஜினியின் காலா, விஜய்யின் மெர்சல் உள்ளிட்ட 99 சதவிகித தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் ரத்தாகி உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com