THE HUNT The Rajiv Gandhi Assassination Case
THE HUNT The Rajiv Gandhi Assassination Caseweb

”உயிரோடு இருக்காரா?” ராஜீவ் காந்தி படுகொலை சார்ந்து வெளியாகும் வெப் சீரிஸ்.. கவனம் பெறும் ட்ரெய்லர்!

ராஜீவ் காந்தி படுகொலை சார்ந்து THE HUNT The Rajiv Gandhi Assassination Case என்ற வெப் சீரிஸ் வெளியாகவிருப்பது ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on

தமிழ்நாட்டின் அழியாய் கறையாய் மாறிவிட்ட ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து சோனி லைவ் வெப் சீரிஸ் ஒன்றை இந்த வாரம் வெளியிடவிருக்கிறது. இந்த வாரம் வெள்ளியன்று வெளியாகவிருக்கும் THE HUNT The Rajiv Gandhi Assassination Case தொடர் எதையெல்லாம் தொட்டுச் செல்லவிருக்கிறது என்பது குறித்து இந்த இக்கட்டுரையில் பார்க்கலாம்.

வரவேற்பு பெற்ற டிரெய்லர்..

தொடரின் டிரெய்லர் இந்த சீரிஸுக்கான டெம்போவை அட்டகாசமாக செட் செய்கிறது. ' ராஜீவ் காந்தி உயிரோடு இருக்கிறாரா' என்னும் தொலைப்பேசி அழைப்பில் ஆரம்பிக்கிறது டிரெய்லர். ஸ்ரீபெரும்புதூரில் நடந்த அந்த விபத்தை இந்தியர்கள் யாரும் அவ்வளவு எளிதாய் மறந்துவிட முடியாது.

rajiv gandhi
rajiv gandhi

இந்த தொடர் மூத்த பத்திரிகையாளர் அனிருத்யா மித்ரா எழுதிய Ninety Days : The True Story of the Hunt for Rajiv Gandhi's Assassins என்ற புத்தகத்தையும், நிஜமான சம்பவங்களையும் அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. ஃபாரன்சிக் அதிகாரி சந்திர சேகரனாக தமிழ் நடிகர் அபிஷேக் ஷங்கர் நடித்திருக்கிறார். இன்சைட் எட்ஜ் , மகாராணி உட்பட பல தொடர்களில் சிறப்பாக நடித்த அமித் சியால் S I T ன் தலைமை அதிகாரியாக செயலாற்றிய கார்த்திகேயன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மெட்ராஸ் சிபிஐ டிஎஸ்பி ரகோத்தமனாக பக்ஸ் நடித்திருக்கிறார்.

தொடரின் கதைக்களம் என்ன?

ராக்கெட் பாய்ஸ், Scam 1992: The Harshad Mehta Story , Scam 2003: The Telgi Story, Freedom at Midnight என உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி சோனி லைவ் ஏற்கெனவே பல வெப் சீரிஸை வெளியிட்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக இந்த முறை ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பான சீரிஸை எடுத்திருக்கிறார்கள்.

'ONE EYED JACK' சிவராசனை எப்படி இந்திய அதிகாரிகள் சுற்றி வளைத்தனர் என்பதே கதைக்களம். அதாவது இந்த விபத்துக்குப் பின்னான 90 நாட்களில் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பாக இந்த சீரிஸ் விரியக்கூடும். பாலஸ்தீன அதிபர் யாசர் அரஃப்ட் முதல் சுப்ரமணிய சுவாமி வரை பலர் ராஜீவ் காந்தியின் உயிருக்கு ஆபத்து இருந்ததை எச்சரித்தனர் என புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும்.

அதே போல், சிவராசன் வெறுமனே ஒரு குறிப்பிட்ட இயக்கம் சார்ந்த நபர் என்பதைக் கடந்து பல நாடுகளில் அவருக்கு இருக்கும் நெட்வொர்க் குறித்து புத்தகம் அலசியிருக்கும். நரசிம்ம அரசு குறித்தும் பேசியிருக்கும். ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தில் ஒரு பெண் சூசைட் பாம்பராக செயல்பட்டிருக்கிறார் என்பதை சந்திரசேகரன் எப்படி கண்டுபிடித்தார் போன்ற விஷயங்கள் சுவாரஸ்யமாக சொல்லப்பட்டிருக்கும்.

இந்தி டிரெய்லர் வெளியான 10 நாட்களில் கிட்டத்தட்ட 4 கோடி பார்வைகளை பெற்றிருக்கிறது. ராஜீவ் காந்தியின் படுகொலையை இந்தியர்கள் அவ்வளவு எளிதாய் மறந்துவிடவில்லை என்பதற்கு இதுவே சாட்சி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com