\
விவேக் ஒரு படத்தை இயக்கவிருந்தார்; சிறந்த இயக்குநரை இழந்துவிட்டோம் : சத்யஜோதி ஃபிலிம்ஸ்

விவேக் ஒரு படத்தை இயக்கவிருந்தார்; சிறந்த இயக்குநரை இழந்துவிட்டோம் : சத்யஜோதி ஃபிலிம்ஸ்

விவேக் ஒரு படத்தை இயக்கவிருந்தார்; சிறந்த இயக்குநரை இழந்துவிட்டோம் : சத்யஜோதி ஃபிலிம்ஸ்
Published on

”நடிகர் விவேக் இயக்கவிருந்த திரைப்படத்தை தயாரிக்கவிருந்தோம். ஒரு சிறந்த இயக்குநரை இழந்துவிட்டோம்” என்று சத்யஜோதி ஃபிலிம்ஸ் உருக்கமுடன் தெரிவித்துள்ளது.

பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ”விவேக்கின் மறைவு நம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் ஒரு நல்ல மனிதர். சமூக ஆர்வலர். நகைச்சுவையாளர். பகுத்தறிவாளர் மட்டுமல்லாது எதிர்கால ஒரு சிறந்த இயக்குநரையும் நாம் இழந்துவிட்டோம். ஆம், கடந்த ஒரு மாத காலமாக எங்கள் சத்யஜோதி நிறுவனத்திற்கு வந்து எங்களது தயாரிப்பில்தான் அவருடைய முதல் படத்தை இயக்கவேண்டும் என்று விருப்பப்பட்டு பலமுறை கதை ஆலோசனையிலும் ஈடுபட்டார்.

படத்திற்கான முன்னேற்பாடுகளையும், நடிகர், நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்களின் தேர்வும் நடைபெற்ருக்கொண்டிருக்கும் தருவாயில் அவர் மறைந்த செய்தி எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஒரு சிறந்த இயக்குநர் என்ற மற்றுமொரு பரிணாமத்தை நம்மிடையே காண்பிக்கும் முன்பே இறைவனடி சேர்ந்தது நமது துரதிர்ஷ்டமே. அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்” என்று உருக்கமுடன் இத்தகவலை தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com