\
நாங்களும் தமிழ் மக்கள்தான் - ராகவேந்திரா லாரன்ஸ்

நாங்களும் தமிழ் மக்கள்தான் - ராகவேந்திரா லாரன்ஸ்

நாங்களும் தமிழ் மக்கள்தான் - ராகவேந்திரா லாரன்ஸ்
Published on

அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என்று நடிகரும் இயக்குநருமான ராகவேந்திரா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா நடைபெற்றது. அப்போது பேசிய லாரன்ஸ் " அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், நாங்களும் தமிழ் மக்கள்தான்" என்று கூறினார். இதனையடுத்து பேசிய பலர், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர முடிவெடுத்திருப்பதாக திரையுலகினர் தெரிவித்தனர். 

இவ்விழாவில் எழுத்தாளர் கலைஞானம், இயக்குநர்கள் எஸ்.பி முத்துராமன், பி.வாசு, கே.எஸ். ரவிக்குமார், நடிகர் லாரன்ஸ், கராத்தே தியாகராஜன் நடிகை மீனா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தமிழகத்தில் ஆளுமைக்கான வெற்றிடம் உள்ளது உண்மைதான் ‌எனவும் அதனை நிரப்பும் ஒரே தலைவர் ரஜினிகாந்த் தான் எனவும் விழாவில் பேசிய பலரும் தெரிவித்தனர். ரஜினிகாந்தின் வியூகங்களை‌‌ யாரும் நினைத்துக்கூட பார்க்கமுடியாது என்றும் கூறினர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com