உறுதியாக நம்புவதை மட்டும்தான் படமாக எடுப்போம்: அமீர்கான்

உறுதியாக நம்புவதை மட்டும்தான் படமாக எடுப்போம்: அமீர்கான்

உறுதியாக நம்புவதை மட்டும்தான் படமாக எடுப்போம்: அமீர்கான்
Published on

நாங்கள் உறுதியாக நம்புவதை மட்டும்தான் படமாக எடுப்போம் என்று பாலிவுட் நடிகர் அமீர்கான் தெரிவித்துள்ளர்.

தங்கல் பட வெற்றியைத் தொடர்ந்து அமீர்கான் தற்போது ‘சீக்ரெட் சூப்பர்ஸ்டார்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். தங்கல் படத்தில் அமீர்கானுக்கு மகளாக நடித்த ஜைரா வாசிம் இந்தப்படத்தில்  கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் அமீர்கான், நாங்கள் உறுதியாக நம்புவதை மட்டும்தான் படமாக எடுப்போம். நல்ல கதைகளுடன் திறமையான இயக்குனர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் எங்களை தேடி வருவதால் எங்களிடம் இருந்து நல்ல படைப்புகள் வெளிவருகின்றன.

நல்ல திறமையானவர்களுடன் நான் பணியாற்றி வருகிறேன். தங்கல் படம்போல் ‘சீக்ரெட் சூப்பர்ஸ்டார்’ படமும் பெண்களுக்கான படம். ஆண்களுக்கு நிகராக பெண்களும் மதிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் படம். ஒரு பெண் தனது கனவுகளை நிறைவேற்றிக்கொள்ள எடுக்கும் போராட்டம் தான் படத்தின் கதை என்று தெரிவித்துள்ளார்.

‘சீக்ரெட் சூப்பர்ஸ்டார்’ படம் அக்டோபர் 18 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com