சினிமா
வலிமை ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு ஒத்திவைப்பு - போனிகபூர் அறிக்கை
வலிமை ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு ஒத்திவைப்பு - போனிகபூர் அறிக்கை
வலிமைப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக அந்தப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து போனிகபூர் வெளியிட்ட அறிக்கையில், “நாங்கள் வலிமைப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை அஜித்தின் 50வது பிறந்தநாளான வரும் மே 1 ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்தோம்.
ஆனால், இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை சுனாமி போல பரவி வரும் சூழ்நிலையில் லட்சக்கணக்கான இந்தியர்கள் பொருளாதார சிக்கலை சந்தித்துள்ளனர். தங்களது உறவினர்களை இழந்தவர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளார்கள். ஆகையால் நாங்கள் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டை தள்ளிவைக்க முடிவெடுத்துள்ளோம்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.