"திருட்டு தளத்தில் மாடத்தி படத்தை பார்க்காதீர்கள், வீட்டு வாடகைக்கே கஷ்டம்"- லீனா மணிமேகலை

"திருட்டு தளத்தில் மாடத்தி படத்தை பார்க்காதீர்கள், வீட்டு வாடகைக்கே கஷ்டம்"- லீனா மணிமேகலை

"திருட்டு தளத்தில் மாடத்தி படத்தை பார்க்காதீர்கள், வீட்டு வாடகைக்கே கஷ்டம்"- லீனா மணிமேகலை
Published on

"மாடத்தி" திரைப்படத்தை திருட்டு காப்பியாக பார்க்காதீர்கள் நீங்கள் டிக்கெட் வாங்கிப் பார்த்தால் மட்டுமே நான் அடுத்தமாதம் வீட்டு வாடகை கட்ட முடியும் என்று எழுத்தாளரும் இயக்குநருமான லீனா மணிமேகலை தெரிவித்துள்ளார்.

இயக்குநர், கவிஞர், பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர் லீனா மணிமேகலை. இவர் சில படங்களை இயக்கியும் தயாரித்தும் வருகிறார். இவர் சமீபத்தில் இயக்கியுள்ள படம் தான் மாடத்தி. நீஸ்ட்ரீம் எனும் ஒடிடி தளத்தில் இந்தப் படம் வெளியாகி இருக்கிறது. இவர் ஏற்கெனவே செங்கடல் எனும் படத்தை இயக்கி இருக்கிறார். இந்நிலையில், ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள மாடத்தி விமர்சகர்களிடையே ஓரளவு நல்ல வரவேற்பையும் பெற்று இருக்கிறது. இந்நிலையில் லீனா மணி மேகலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வேண்டுகோள் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் "PiratedCopy பாக்கிறவங்களுக்கு ஒரு வேண்டுகோள்.கோடிகளைக் கொட்டி எடுக்கப்படும் படங்களை அதைவிட கோடிகளைக் கொடுத்து வாங்கிக் கொள்கின்றன நிறுவனங்கள்.மாடத்தி படத்தின் நிலவரம் வேறு. @neestream தளத்தில் நீங்கள் டிக்கெட் வாங்கிப் பார்த்தால் மட்டுமே நான் அடுத்தமாதம் வீட்டுவாடகை கட்டமுடியும்" என லீனா மணிமேகலை தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com