\
ட்விட்டர் ட்ரெண்டில்‘பாகமதி’ ட்ரெய்லர்

ட்விட்டர் ட்ரெண்டில்‘பாகமதி’ ட்ரெய்லர்

ட்விட்டர் ட்ரெண்டில்‘பாகமதி’ ட்ரெய்லர்
Published on

அனுஷ்கா நடிப்பில் வெளிவரவுள்ள பாகமதி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நடிகை அனுஷ்கா நடிப்பில், ஜி.அசோக் இயக்கத்தில் திரைக்கு வரவுள்ள படம் ‘பாகமதி’. இதில் நடிகர் ஜெயராம், உன்னி முகுந்தன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் இந்தப் படம் விரைவில் வெளியாகவுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் வெளியாகியுள்ள ட்ரெய்லர் பார்ப்பவர்களை மிரள வைத்துள்ளது. சந்திரமுகி படத்தில் ‘ஜோதிகா’ நடிப்பை நினைவு படுத்தும் வகையில், இந்தப்படத்தில் அனுஷ்காவின் நடிப்பு அமைந்துள்ளது. ஹாரர் திரில்லர் ப்ரியர்களுக்கு இந்தப் படம் நல்ல விருந்தாக அமையும். இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகிவுள்ள நிலையில், ட்விட்டரின் சென்னை ட்ரெண்டிங்கில் அனுஷ்கா செட்டி இடம்பெற்றுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com