"யாரும் என்னைத் தாக்கவில்லை... இந்தியா மாறிவிட்டது!"- நடிகர் சித்தார்த் பகிர்ந்த வீடியோ

"யாரும் என்னைத் தாக்கவில்லை... இந்தியா மாறிவிட்டது!"- நடிகர் சித்தார்த் பகிர்ந்த வீடியோ
"யாரும் என்னைத் தாக்கவில்லை... இந்தியா மாறிவிட்டது!"- நடிகர் சித்தார்த் பகிர்ந்த வீடியோ

திஷா ரவி கைது தொடர்பாக வீடியோ ஒன்றை பகிர்ந்து மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார், நடிகர் சித்தார்த்.

நடிகர் சித்தார்த் இன்று ஒரு வீடியோவை பகிர்ந்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்த வீடியோ 2009-ஆம் ஆண்டில் 'இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ்' விழாவின்போது எடுக்கப்பட்டது. அந்த வீடியோவில் சித்தார்த், நாட்டின் விவகாரங்கள் குறித்தும், ஒரு ஜனநாயகத்தில் ஊடகங்களின் பங்கு மற்றும் ஒரு சாதாரண மனிதர் இனி எப்படி ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்த முடியும் என்பதைப் பற்றியும் பேசியுள்ளார்.

இந்த வீடியோவுடன், "2009-ல் இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் எனது உரை இது. இந்த நாட்டில் மறதி நோய் இருந்தது. ஒரு புதிய சாதாரண வகையான தீமையால் மூளைச் சலவை செய்யப்படுகிறது. நாங்கள் 2014-ல் தாளங்களை மாற்றியவர்கள் அல்ல. உண்மையாக இருங்கள். உண்மை பேசுங்கள்" என்றும், "எனது பேச்சின் தொனி மற்றும் தன்மை குறித்து எனக்கு ஏன் ஒரு புகார் அல்லது அச்சுறுத்தல் வரவில்லை என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது?

ஒரு கருத்தைக் கொண்டிருப்பதற்காக, கேள்விகளைக் கேட்டதற்காக யாரும் என்னைத் தாக்கவில்லை... இந்தியா மாறிவிட்டது. இது நம் கண்களுக்கு முன்னால் மாறியது. கேள்வி என்னவென்றால்... இதைப் பற்றி நாம் என்ன செய்யப் போகிறோம்?" என்றும் சித்தார்த் பதிவிட்டுள்ளார்.

https://t.co/v0UkXCG9kR

My speech at the Indian School of Business, 2009. This country used to have amnesia. Now its being brainwashed and gaslit by a new normal kind of evil.

We are not those who changed their tunes in 2014. Stay true. Speak the truth.
— Siddharth (@Actor_Siddharth) February 17, 2021

சூழலியல் ஆர்வலர் திஷா ரவி கைது செய்யப்பட்ட 'டூல்கிட்' வழக்கைக் கையாள்வதை எதிர்த்து ட்வீட் செய்து நடிகர் சித்தார்த் தற்போது இதையும் பதிவிட்டுள்ளார். திஷா ரவி கைது குறித்து, ``இது உங்களுக்கு நேர்ந்ததற்கு மன்னிக்கவும் சகோதரி. நாங்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறோம். வலுவாக இருங்கள். இந்த அநீதியும் கடந்து போகும். திஷா ரவிக்கு என் ஆதரவு உண்டு" என்று அவர் பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com