விபத்து எதிரொலி: இந்தியன்2 படப்பிடிப்பு தளத்திற்கு தடை?

விபத்து எதிரொலி: இந்தியன்2 படப்பிடிப்பு தளத்திற்கு தடை?
விபத்து எதிரொலி: இந்தியன்2 படப்பிடிப்பு தளத்திற்கு தடை?

‘இந்தியன்2’ விபத்து தொடர்பாக நடிகர் கமல்ஹாசனிடம் விசாரணை நடத்தப்படலாம் என்று வதந்தி பரவி வருகிறது.

கடந்த புதன்கிழமை அன்று கமல்ஹாசன் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் மது, கிருஷ்ணா மற்றும் சந்திரன் ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர். விபத்திற்கு காரணமான கிரேன் ஆபரேட்டர் ஒரு பயிற்சி பெற்ற நிபுணர் அல்ல, இயந்திரத்தை சரியாக இயக்குவது எப்படி என்று அவருக்கு தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆகவே கிரேனை இயக்க தெரியாமல் மரணத்தை ஏற்படுத்தியதற்காக காவல்துறையினர் ஆபரேட்டர் ராஜன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் கிரேன் அறுந்து விழுந்த இந்த விபத்து குறித்து சென்னை போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும் விபத்து தொடர்பாக கிரேன் ஆபரேட்டரை போலீசார் கைது செய்துள்ளனர். விபத்து நடந்தபோது சம்பவ இடத்திலிருந்த அனைவரையும் போலீசார் விசாரிக்க தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே விபத்து நடந்த தனியார் படப்பிடிப்புத் தளத்திற்கு தடை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் தென்னிந்திய திரைப்பட ஊழியர் சம்மேளனம் (FEFSI) குறிப்பிட்ட இந்த ஸ்டுடியோவுக்கு தடை விதித்ததாகவும், பல படங்களுக்கு கடந்த ஆண்டு அங்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன. இருந்தபோதிலும், அந்த இடத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதிக்குமாறு உரிமையாளர்கள் அமைப்பைக் கோரியதைத் தொடர்ந்து ஸ்டுடியோக்கள் மீண்டும் திறக்கப்பட்டதாகத் தெரிகிறது. பெஃப்சி அமைப்பு போதுமான பாதுகாப்பு சோதனைகள் செய்திருந்தால், இந்த மூன்று உயிர்களின் இழப்பு ஏற்பட்டிருக்காது என்றும் கூறப்படுகிறது.



இந்த வழக்கு தொடர்பாக ‘இந்தியன் 2’ இயக்குனர் ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரும் விசாரிக்கப்படலாம் என பரபரப்பு நிலவுகிறது. ஆனால் அது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை. அதேபோல இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது என்றும் வதந்தி பரவியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com