சினிமா
சித்ரா நடித்த ‘கால்ஸ்’ திரைப்படத்தின் இசையை நாளை வெளியிடும் அவரது பெற்றோர்
சித்ரா நடித்த ‘கால்ஸ்’ திரைப்படத்தின் இசையை நாளை வெளியிடும் அவரது பெற்றோர்
மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா சினிமாவில் நடிகையாக அறிமுகான 'கால்ஸ்' திரைப்படத்தின் இசையை நாளை அவரது பெற்றோர் வெளியிடுகிறார்கள்.
’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மூலம் கவனம் ஈர்த்தவர் சின்னத்திரை நடிகை சித்ரா. இவர், குடும்பப் பிரச்சனையால் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டார். இறப்பதற்கு முன்பு சித்ரா சினிமாவில் முதன்முறையாக ஹீரோயினாக ’கால்ஸ்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். அறிமுக இயக்குநர் சபரீஷ் இயக்கியிருக்கிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் டீசரும் சமீபத்தில் வெளியாகியிருந்த நிலையில், நாளை காலை 9 மணிக்கு ’கால்ஸ்’ திரைப்படத்தின் இசையும் ட்ரைலரும் வெளியிடப்படவுள்ளது. இதனை சித்ராவின் அப்பா காமராஜும், அம்மா விஜயாவும் வெளியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.