vj siddhu vlogs
vj siddhu vlogspt web

“நகைச்சுவை என்ற பெயரில் வலுக்கட்டாய தாக்குதல்..” சர்ச்சையில் விஜே சித்து!

தமிழ் யூடியூபர்களில் பிரபலமான வி.ஜே. சித்துவை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
Published on

தமிழ் யூடியூபர்களில் பிரபலமான வி.ஜே. சித்துவை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அண்மையில் அவரது யூடியூப் சேனலில் வெளியிட்ட வீடியோவில், தனது நண்பரை சரமாரியாக அடித்து உதைக்கிறார். நிக்கல், குந்தல் விளையாட்டு என்ற பெயரில் அவரை சித்து தாக்கியதைக் கண்டு சக நண்பர்களும் சிரித்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில், பல்வேறு தரப்பினரும் இதுபோன்று ஒருவரை அடிப்பது தவறு என கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர்.

vj siddhu vlogs
vj siddhu vlogs

வி.ஜே.சித்துவின் சேனலில் முன்னதாக அன்றாடம் நண்பர்கள் பேசிக் கொள்வது போன்று பேசி சிரிக்க வைத்தனர். ஆனால், தற்போது வலுக்கட்டாயமாக நகைச்சுவை என்ற பெயரில் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com