\
அம்மாவான தொகுப்பாளினி அஞ்சனா

அம்மாவான தொகுப்பாளினி அஞ்சனா

அம்மாவான தொகுப்பாளினி அஞ்சனா
Published on

தொகுப்பாளினி அஞ்சனா தாயானதாக அவருடைய கணவர் சந்திரன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

ஏகப்பட்ட ரசிகர்களை தன்வசப்படுத்தி உள்ளவர் தொகுப்பாளி அஞ்சனா. இவரும் ‘கயல்’ படத்தில் நடித்த சந்திரனும் 2016ம் ஆண்டு மார்ச் மாதம் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் அவர் தொகுப்பாளராக இருந்த தொலைக்காட்சியில் இருந்து சில மாதங்களுக்கு முன் விலகுவதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். 

அதில் தொகுப்பாளராக வேலை செய்தது நல்ல அனுபவங்களை தந்ததாகவும், பத்து வருடம் பணிபுரிய வாய்ப்பளித்தமைக்கு நன்றி என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் அஞ்சனாவின் கணவர் சந்திரன் அஞ்சனா விரைவில் தாயாகப் போவதாக அறிவித்திருப்பதோடு அஞ்சனா நிறைமாதமாக இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இதனால் அவருடைய ரசிகர்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் வாழ்த்துகள் தெரிவித்துவருகின்றனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com