\
’விவேகம்’ இசை ஜூலையில்.....

’விவேகம்’ இசை ஜூலையில்.....

’விவேகம்’ இசை ஜூலையில்.....
Published on

விவேகம் இசை வெளியீடு ஜூலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
’தல’ அஜித்தின் நடிப்பில் உருவாகி அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிற படம் ‘விவேகம்’. இப்படத்தின் ஆடியோ உரிமத்தை ம்யூசிக் துறையின் ஜாம்பவானான சோனி ம்யூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை ட்விட்டர் பதிவின் மூலம் சோனி ம்யூசிக்கின் மேனேஜிங் டைரக்டர் ஸ்ரீதர் சுப்ரமணியம் உறுதிப்படுத்தியுள்ளார். அஜித்துடன் ஆறாவது முறையாக கைகோர்ப்பது மகிழ்ச்சி எனவும் அவர் தெரிவித்துள்ளார். இப்படத்திற்கான இசையை அனிருத் அமைத்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால், விவேக் ஓப்ராய், அக்‌ஷரா ஹாசன் ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்தின் பாடல்கள் ஜூலை மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com